சென்னை தலைமை செயலகத் தில் முதலமைச்சர் பழனிசாமியுடன் பாமக அன்புமணி ராமதாஸ் சந்திப்பு
வன்னியர்களுக்கு 20%இட ஒதுக்கீடு வழங்க கோரி முதலமைச்சரிடம் இளைஞரணி தலைவர் அன்புமணி கோரிக்கை மனு அளித்துள்ளார்.
பின் செய்தியாளரை சந்தித்த அன்புமணி கூறியதாவது:
வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 20% இடஒதுக்கீடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளோம். போராட்டத்தை அமைதியான வழியில் முன்னெடுக்க பாமக தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எந்த அமைப்புக்கோ, அரசியல் கட்சிக்கோ எதிரான போராட்டம் இது கிடையாது தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்கள் மிகமிக பின்தங்கிய நிலையில் இருக்கிறார்கள்
எங்களது கோரிக்கை தொடர்பாக நல்ல முடிவை அறிவிப்பேன் என்று முதலமைச்சர் உறுதி அளித்து இருக்கிறார்
எங்கள் சமுதாயத்தை வன்முறை சமுதாயமாக அடையாளப்படுத்த சிலர் நினைக்கின்றனர். அது வேண்டாம் எனவும், கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு எங்களது போராட்டம் 40 ஆண்டு காலமாக நீடித்து வருகிறது என்றும் கூறினார்.