• vilasalnews@gmail.com

கோவில்களில் சாமி தரிசனம் செய்ய தடை!

  • Share on

கொரோனோ பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மதுரை மாநகரில் உள்ள கோவில்களில் வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

கொரோனா 3ம் அலை பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை மாவட்டத்தில் உள்ள மதுரை மீனாட்சியம்மன் கோவில், கள்ளழகர் கோவில், கூடலழகர் பெருமாள் கோவில், திருப்பரங்குன்றம் முருகன், பழமுதிர் சோலை ஆகிய கோவில்களில் வரும் 2ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நடைபெறும் ஆடி, கிருத்திகை நிகழ்ச்சிகள் பக்தர்கள் அனுமதியின்றி நடைபெறும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. மேற்கண்ட நிகழ்ச்சிகளில் அர்ச்சகர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் வேகம் அதிகரித்துவருகிறது. இது 3 ஆம் அலைக்கான முன்னோட்டமான என மருத்துவ ஆய்வாளர்களும், சுகாதாரத்துறையினரும் சந்தேகித்துவருகின்றனர். இதனால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப் பட்டுவருகின்றன.

  • Share on

சபலத்தால் வந்த வினையால் அவர்...பண ஆசையால் மானம் கெட்டு இவர்கள்...கம்பி என்னும் நிலை..!

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு : மீனவரின் தலையில் குண்டு பாய்ந்தது!

  • Share on