• vilasalnews@gmail.com

சபலத்தால் வந்த வினையால் அவர்...பண ஆசையால் மானம் கெட்டு இவர்கள்...கம்பி என்னும் நிலை..!

  • Share on

பேஸ்புக்கில் காதல் வலை வீசியும், வாட்ஸ் அப்பில் ஆபாச சேட் செய்தும், 50 வயதுடைய தொழிலதிபரிடம் பல லட்சங்களை கறந்துள்ளார் ஜனனி. இதனால் அந்தப்பெண் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், கண்டியூர் பகுதியைச் சேர்ந்த சரவண பார்த்திபன் என்பவர் ரியல் எஸ்ட்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு தூத்துக்குடியை சார்ந்த ஜனனி(25) என்ற பெண்ணுடன் பேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் சாட் செய்து வந்த இருவருக்கும் கொஞ்ச நாளிலே காதல் பற்றிக்கொள்ள, ஜனனியின் செல்போன் நம்பரை கேட்டுள்ளார் தொழிலதிபர். அந்த திருமணமான பெண்ணும் இவருடன் எண்ணை பகிர்ந்து ஆசை வார்த்தைகள் கூறி பேசி வந்துள்ளார். ஜனனியின் குரலை கேட்டதும் மயங்கிப் போன சரவணன், அவருடன் அந்தரங்க பேச்சுக்களையும் பேசி வந்துள்ளார்.

இதை சாதுர்யமாக பயன்படுத்திக் கொண்ட ஜனனி, அவரிடம் இருந்த பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக பறிக்க ஆரம்பித்துள்ளார். கூகுள் பே, போன் பே போன்ற ஆப்கள் மூலம் ஜனனியின் வங்கிக்கணக்கில் பல லட்சங்கள் குவிந்துள்ளது. இந்த விஷயம் ஜனனியின் கணவர் பார்த்திபனுக்கு தெரிய வர, அந்த பெண்ணை திட்டியுள்ளார். தனது திட்டம் குறித்து எடுத்து கூறி சமாதானம் செய்துள்ளார் ஜனனி. சும்மா வரும் பணத்தை விடவேண்டாம் என அந்த மானம் கெட்ட கணவரும் அமைதியாகிவிட, இந்த கொடூர எண்ணம் கொண்ட பெண்ணின் வேலை தொடர்ந்துள்ளது.

ஆனால் வாய்ஸ் சேட்டிங் சரவண பார்த்திபனுக்கு சலிப்பை ஏற்படுத்த, ஜனனியை கழட்டி விட்டுள்ளார். இதனால் ஏமாற்றமடைந்த ஜனனி, செல்போன் எண்ணை மாற்றி அவருடைய தோழியைப்போல், தொழிலதிபரிடம் பேசியுள்ளார். இதை அறியாத சரவண பார்த்திபனும் சேட் செய்துள்ளார். மொத்தமாக பணத்தை ஆட்டைய போட நினைத்த ஜனனிக்கு, ஆப்பு காத்திருந்தது.

சரவண பார்த்திபனுக்கு போன் செய்து, என் தோழியிடம் நீங்க பேசுவது அவ வீட்டில் தெரிஞ்சு பிரச்சனை ஆயிடுச்சு. அவளுக்கு செட்டில் பண்ணி விடுங்க என்று கூற, தொழிலதிபர் மறுத்துவிட்டார். பெண் போலீஸ் போல் பேசி மிரட்டியுள்ளாள் ஜனனி. இதனால் பதற்றமடைந்த சரவணன் குறிப்பிட்ட தொகையை கொடுக்க சம்மதித்தார். இதன்பின் தனது கணவரை போலீஸ் போல அனுப்பியுள்ளார் ஜனனி. 

சரவண பார்த்திபன் தொழிலதிபர் என்பதால், பார்த்திபனை பார்த்தவுடன் போலி போலீஸ் என்பதை அறிந்துகொண்டார். இதனால் அவரை தனது நண்பர் ஹோட்டலில் தங்க வைத்து, நண்பர்களை வைத்தே நன்கு கவனித்துள்ளார். பார்த்திபன் உண்மையை ஒத்துக்கொள்ள, தொழிலதிபர் ஜனனியை தொடர்பு கொண்டு மொத்த பணத்தையும் செட்டில் செய்துவிட்டு உன் புருஷன கூட்டிட்டு போ என்று மிரட்டியுள்ளார்.

ஆனால் இதற்கெல்லாம் பயப்படாத தில்லாலங்கடி ஜனனி, கணவரை கடத்திட்டுபோய் பணம் கேட்டு மிரட்டுறாங்க என தூத்துக்குடி காவல் நிலையத்திலும், கும்பகோணம் உள்ளூர் காவல் நிலையத்திலும் புகார் கொடுத்து தனது நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். போலீசார் லாட்ஜில் அடைத்து வைக்கப்பட்ட பார்த்திபனை மீட்டு, சரவண பார்த்திபனையும் அவரது கூட்டாளிகளையும் கைது செய்தனர். 


இதைத்தொடர்ந்து காவல் நிலையத்தில் நடத்திய விசாரணையில் தான் போலீசாருக்கு பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வந்துள்ளது. ஜனனி ஆபாச வார்த்தைகள் கூறி, தொழிலதிபரை ஏமாற்றியதும் தெரியவர, சரவண பார்த்திபன் சார்பாகவும் புகார் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் ஜனனி, அவரது கணவர் பார்த்திபன், தொழிலதிபர் சரவண பார்த்திபன் உள்ளிட்ட மூன்று பேரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பணத்திற்கும், சபலத்திற்கும் மயங்கி, இப்போது மூவரும் சிறையில் கம்பி எண்ணி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Share on

செல்போனில் சீரியல் பார்த்தபடி பைக் ஓட்டிய இளைஞர்!

கோவில்களில் சாமி தரிசனம் செய்ய தடை!

  • Share on