• vilasalnews@gmail.com

செல்போனில் சீரியல் பார்த்தபடி பைக் ஓட்டிய இளைஞர்!

  • Share on

கோவையில் செல்போனில் சீரியல் பார்த்தபடி இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற தனியார் நிறுவன ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவருக்கு அபாரதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

கோவை காந்திபுரம் மேம்பாலத்தில் நேற்று முன்தினம் இரவு இளைஞர் ஒருவர் செல்போனில் சீரியல் பார்த்துபடி இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்றார். இதனை செல்போனில் படம் பிடித்த சிலர், சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ காட்சி வைரலாக பரவியது. வீடியோவில் பதிவாகி இருந்த இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து, கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அதில் வாகனத்தை ஓட்டிச்சென்ற நபர் கோவை ரத்தினபுரியை சேர்ந்த முத்துசாமி (35) என்பதும், தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிவதும் தெரிய வந்தது. தொடர்ந்து, முத்துச்சாமியை பிடித்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், இருசக்கர வாகனத்தில் ஹெட்லைட் மீது தனியாக செல்போன் ஸ்டாண்ட் அமைத்து, அதில் செல்போன் வைத்து சீரியல், சினிமா உள்ளிட்டவற்றை பார்த்தபடி வாகனம் ஓட்டுவதை வாடிக்கையாக கொண்டிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, முத்துசாமி மீது வாகனத்தை ஓட்டிக்கொண்டு செல்போன் பேசுதல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவருக்கு ரூ.1,200 அபராதம் விதித்து உத்தரவிட்டனர். மேலும், வாகனத்தில் இருந்த செல்போன் ஸ்டாண்டையும் அகற்றினர். மேலும், இதுபோன்ற செயல்களில் யார் ஈடுபட்டாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.



  • Share on

மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு காலணி அணிவித்த மாவட்ட ஆட்சியர்!

சபலத்தால் வந்த வினையால் அவர்...பண ஆசையால் மானம் கெட்டு இவர்கள்...கம்பி என்னும் நிலை..!

  • Share on