• vilasalnews@gmail.com

நட்புக்கு கடன் வாங்கி கொடுத்த நபர் தீக்குளிப்பு...!

  • Share on

பரமக்குடி அருகே நண்பருக்கு கடன் வாங்கி கொடுத்த நபர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, காந்திஜி தெருவை சேர்ந்தவர் பிரசன்னா(30), இவர் அப்பகுதியில் அரிசி கடை நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நண்பர் ஒருவருக்கு தனது பரிந்துரையின் மூலம் 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கி கொடுத்துள்ளார்.

கடன் வாங்கிய நண்பர் பணத்தை சரியாக கட்டாமல் இருந்ததால், கடன் கொடுத்தவர் பிரசன்னாவை வாங்கிய கடனை திருப்பி செலுத்துமாறு தினந்தோறும்  நெருக்கடி கொடுத்துள்ளார்.

அதனால் மன உளைச்சலுக்கு ஆளான பிரசன்னா, இன்று காலை 5 மணியளவில் வீட்டை விட்டு தனது இருசக்கர வாகனத்தில் வெளியே சென்று, ஐந்து முனை ரோடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில், பெட்ரோல் வாங்கிக்கொண்டு காக்கா தோப்பு பகுதியில் உள்ள வைகை ஆற்றங்கரைக்கு சென்று பெட்ரோலை தனது உடல் முழுவதும் ஊற்றி கொண்டு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

ஒரு கட்டத்தில் வலி தாங்க முடியாத அந்த இளைஞர் ஆற்றில் விழுந்து தீயை அணைத்துக் கொண்டுள்ளார். பின்னர் தனது மொபைல் மூலம் தன்னை காப்பாற்றுமாறு காவல்துறைக்கு தகவல் கொடுக்க சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எமனேஸ்வரம் போலீசார், இளைஞரை பார்த்தபோது சட்டை, செருப்பு உள்ளிட்டவை முற்றிலும் தீயில் கருகி, வலியால் துடித்து கொண்டிருந்துள்ளார். 

அவரை மீட்ட எமனேஸ்வரம் போலீசார் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அந்த இளைஞரை பரிசோதித்த மருத்துவர் தீக்காயம் 90 சதவீதத்துக்கு மேல் ஏற்பட்டு இருந்ததால், அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு பரிந்துரை செய்துள்ளனர். 

ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட பிரசன்னா தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும், இந்த சம்பவம் குறித்து எமனேஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

  • Share on

தூத்துக்குடி வாலிபரை கொன்று சடலத்துடன் தங்கிய சைக்கோ இளைஞன்..! ஒரே பாணியில் 3 கொலைகள்

தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

  • Share on