• vilasalnews@gmail.com

குறைகள் இருந்தால் சுட்டிகாட்டுங்கள், குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் : அமைச்சர் சேகர் பாபு

  • Share on

அரசு சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பை தனியாருக்கு எப்படி கொடுக்க முடியுமென அமைச்சர் சேகர் பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்துக் கோவில்களை இந்து அமைப்பின் அறக்கட்டளை வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ள நிலையில் அறநிலையத்துறைகளைக் கலைக்கக் கோரி பாஜக நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளது.

கிறித்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் தங்களது வழிபாட்டுத்தலங்களின் சொத்துக்களை அறக்கட்டளை மூலம் எப்படி நிர்வாகம் செய்கிறார்களோ அதே போல இந்து கோவில்களையும் அறக்கட்டளை மூலம் நிர்வாகம் செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.

பாஜகவின் இந்த வழக்கு குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு  :

அறநிலையத்துறை கோவில்கள் எல்லாம் தனியார் சொத்துக்கள் அல்ல. அரசு சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பை எப்படி தனியாருக்கு வழங்க முடியும் என்று கேள்வி எழுப்பினார். குறைகள் இருந்தால் சுட்டிகாட்டுங்கள், குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் இருந்து திருடப்பட்ட சிலைகளை மீட்க முதலமைச்சர் புதிய திட்டத்தை அறிவிப்பார் என்றும் அதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

  • Share on

5 பைசாவுக்கு சிக்கன் பிரியாணி...கடைசியில் கடை மூடப்பட்டுள்ளது!

நம்பிக்கை துரோகம்...வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை...திமுக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

  • Share on