• vilasalnews@gmail.com

5 பைசாவுக்கு சிக்கன் பிரியாணி...கடைசியில் கடை மூடப்பட்டுள்ளது!

  • Share on

மதுரையில் 5 பைசா கொடுத்தால் பிரியாணி இலவசம் என்ற அறிவிப்பால் ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பிரியானி கடை முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வரும் நிலையில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி அனைத்துக் கடைகளையும் கொரோனா விதிகளை பின்பற்றி திறக்க அரசு அனுமதித்துள்ளது.

இந்நிலையில் மதுரை மாவட்டம் செல்லூரில் இன்று புதிதாக பிரியாணி கடை திறக்கப்பட்டது. இந்த கடை திறப்பை முன்னிட்டு 5 பைசா கொண்டு வந்தால் சிக்கன் பிரியாணி இலவசம் என்ற போஸ்டர் நகர் முழுவதும் ஒட்டப்பட்டிருந்தது. இதை பார்த்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் பிரியாணி கடை முன்பு குவிந்தனர். சமூக இடைவெளியை பின்பற்றாமலும், முகக்கவசம் அணியாமலும் திரண்டுள்ளனர்.

எனினும் கடை உரிமையாளர் கொரோனா விதிகளை பின்பற்றி வருமாறு தொடர்ந்து கோரிக்கை வைத்தும், மக்கள் அதனை பொருட்படுத்த முடியவில்லை இதனையடுத்து காவல்துறையினர் இந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முயன்றாலும், கூட்டத்தை கலைக்க முடியவில்லை. இதனால் வேறு வழியின்றி கடையை மூட சொல்லி காவல்துறையினர் உத்தரவிட்டதை அடுத்து, கடை மூடப்பட்டுள்ளது.

  • Share on

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.. இனிமே பைக்கில் கண்ணாடிகளை அகற்றினால்.. சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

குறைகள் இருந்தால் சுட்டிகாட்டுங்கள், குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் : அமைச்சர் சேகர் பாபு

  • Share on