• vilasalnews@gmail.com

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.. இனிமே பைக்கில் கண்ணாடிகளை அகற்றினால்.. சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

  • Share on

இருசக்கர வாகனங்களில் பின் வரும் வாகனங்களை காண்பதற்கு பக்கவாட்டு மற்றும் வரும் வாகனங்களை காணும் கண்ணாடிகளை அகற்றினால் வாரண்டி இல்லை என எச்சரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இருசக்கர வாகனங்களில் பின் வரும் வாகனங்களை காண்பதற்கு பக்கவாட்டு மற்றும் வரும் வாகனங்களை காணும் கண்ணாடிகளை அகற்றுவதால் விபத்துகள் அதிகரிப்பதாக ராம்குமார் ஆதித்தன் என்பவர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், போக்குவரத்து ஆணையருக்கு ஒரு சில அறிவுறுத்தல்களை உயர்நீதிமன்றம் வழங்கி உள்ளது. 

அதன்படி இருசக்கர வாகனங்களில் பின் வரும் வாகனங்களை காண்பதற்கு பக்கவாட்டு மற்றும் வரும் வாகனங்களை காணும் கண்ணாடிகளை அகற்றினால் வாரண்டி கிடையாது என நுகர்வோரை எச்சரிக்க வேண்டும் என்று போக்குவரத்து ஆணையருக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.

கண்ணாடிகள் பொருத்த வேண்டும் என்ற விதியை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்த நீதிபதி, புதிய வாரண்டி விதிகளை உருவாக்க வாகன உற்பத்தியாளர்களை அறிவுறுத்தலாம் என்று தெரிவித்தார். வாகன ஓட்டிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

  • Share on

’ஜெய்ஹிந்த், ஜெய் தமிழ்நாடு’ - கூறி உரையை முடித்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்..!

5 பைசாவுக்கு சிக்கன் பிரியாணி...கடைசியில் கடை மூடப்பட்டுள்ளது!

  • Share on