காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே பல கோடி ரூபாய் மதிப்பிலான பூதேவி உலோக சாமி சிலை மீட்கப்பட்டது.
கிழக்கு கடற்கரைச் சாலை பக்கிங்காம் கால்வாய் அருகே சிலை கடத்தல் நடைபெறுவதாகக் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலை அடுத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
அப்போது நெருப்பூரில் கையில் பையுடன் வந்த இருவரை மறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உரிய ஆவணங்களின்றி அவர்கள் வைத்திருந்த பூதேவி உலோக சிலையை வைத்திருந்தது தெரியவந்தது. உடனடியாக சிலையை பறிமுதல் செய்தனர்.
இவர்கள் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்களான வேல்குமார், செல்வம் என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் சிலையைக் கைமாற்றிவிட சென்றனரா?இவர்கள் பின்புலம் என்ன? என போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்