இந்தியவில் கொரோனா பரவல் ஒருபுறமிருக்க தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் மழைக்காலம் தொடங்கி உள்ளதால் தற்போது டெங்கு காய்ச்சல் உருவாகியுள்ளது.
கடந்த 6மாதங்களில் இந்தியாவிலேயே தமிழகத்தில் டெங்கு 2ஆயிரத்து 90பேருக்கு பாதித்துள்ளது. ஜனவரி 1முதல் ஜூன் 30வரை இந்தியாவில் 6ஆயிரத்து 837பேருக்கு டெங்கு கண்டறியப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே கொரோனாவாக்கும், டெங்குவுக்கும் ஒரே மாதிரியான அறிகுறி இருப்பதால் பொது மக்களிடையே குழப்பம் நிலவி வருகிறது.
இதன் காரணமாக கடந்த ஆண்டை போல அலட்சியமாக அல்லாமல் நோய் அறிகுறிகளை கண்டறிந்து சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
இது குறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில், டெங்கு பாதித்தவர்களுக்கு காய்ச்சல் விட்டு விட்டு வரும் எனவும், கண்களுக்கு பின்னால் வழி இருக்கும் நீர் சத்து மிகவும் குறையும் எனவும் கூறினர்.
டெங்கு காய்ச்சல்கொரோனாவுடன் ஒப்பிடுகையில் ஆரம்ப கட்ட அறிகுறிகள் ஓரே மாதிரியாக இருக்கும் ஆதலால் கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனர்.
மேலும் டெங்கு காய்ச்சலுக்கு வயிற்று வலி ஏற்படும் எனவும் தெரிவித்தனர்.