• vilasalnews@gmail.com

இந்த மாவட்டங்களில் மட்டும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை…. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

  • Share on

தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனத்தின் காரணமாக இன்று முதல் வருகின்ற 11ம் தேதி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

இதுகுறித்த செய்தி குறிப்பில் குமரிக்கடல்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய பகுதிகளில்‌ 1.5 கிலோமீட்டர்‌ உயரத்தில்‌ நிலவும்‌ வளிமண்டல மேலடுக்கு சுழற்சி‌ மற்றும்‌ வெப்பசலனத்தின்‌ காரணமாக இன்று திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர்‌, மதுரை, வேலூர்‌, ராணிப்பேட்டை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, மேற்கு தொடர்சி மலையை ஓட்டிய நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி மாவட்டங்கள்‌ மற்றும்‌ உள்‌ மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான மழையும்‌ பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு‌.

நாளை திருவள்ளூர்‌, வேலூர்‌, ராணிப்பேட்டை, திருப்பத்தூர்‌, கிருஷ்ணகிரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, மேற்கு தொடர்ச்‌சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி மாவட்டங்கள்‌ மற்றும்‌ உள்‌ மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌, கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான மழையும்‌ பெய்யக்கூடும்‌. நாளை மறுநாள் நீலகிரி, கோயம்புத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

மேலும் தென்‌ மேற்கு பருவமழை தீவிரமடைவதன்‌ காரணமாக 10 மற்றும்‌ 11 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, திண்டுக்கல்‌ மாவட்டத்தில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, திருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌, ராணிப்பேட்டை, சென்னை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான மழையும்‌ பெய்யக்கூடும்‌. ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலையே நிலவும் என வானிலை மையம் அறிவிப்பு‌.

குறிப்பாக நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை வாய்ப்புள்ளதால் மலைப் பகுதிகளில் மண்சரிவு ஏற்படக் கூடும் என்பதால் பொதுமக்கள் மழை ஏற்றத்தை தவிர்க்க வேண்டும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் பகுதிகளில் இன்று முதல் வருகின்ற 11ம் தேதி வரை பலத்த காற்று மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வரை வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

  • Share on

‘பப்ஜி’ மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்!

  • Share on