• vilasalnews@gmail.com

‘பப்ஜி’ மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

  • Share on

ஆபாச பேச்சு, பண மோசடி உள்ளிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

இந்நிலையில் யூடியூபில் ஆபாசமாக பேசி பண மோசடி செய்த மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இரண்டு முறை ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

பப்ஜி உள்ளிட்ட விளையாட்டுகளில் சிறுவர், சிறுமிகளிடம் ஆபாசமாகப் பேசி பணம் சம்பாதித்தார் மதன். ஆதரவற்றோருக்கு உதவுவதாக கூறி ஆன்லைனில் பணம் வசூலித்து மோசடி செய்ததாலும் கைதானார் பப்ஜி மதன். பப்ஜி விளையாட்டில் ஆபாசமாக பேசி யூடியூபில் வீடியோ வெளியிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதாக சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

  • Share on

விவசாயம் போக சும்மா இருக்க நேரத்துல வீடியோ போட்டோமுங்க'...வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனலுக்கு குவியும் பாராட்டு

இந்த மாவட்டங்களில் மட்டும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை…. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

  • Share on