உணவுகளை சமைத்து யூடியூபில் வீடியோவாக வெளியிடும் வில்லேஜ் குக்கிங் யூடியூப் டைமண்ட் பட்டன் வாங்கி அசத்தியுள்ளனர்.
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனலை தெரியாதோர் இருக்க முடியாது. உணவுகளை சமைத்து யூடியூபில் வீடியோவாக வெளியிடுவதை இவர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். மிக அதிக அளவிலான உணவுகளை சமைத்து ஊரில் உள்ள பலருக்கும் விருந்து படைத்து வந்த இந்த சேனல் தற்போது யூடியூபில் டைமண்ட் பட்டன் வாங்கியுள்ளனர்.
இது குறித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வீடியோ ஒன்றை அவர்கள் வெளியிட்டுள்ளனர். அதில், எங்களை நேரில் பார்ப்பவர்களுக்கு தெரியும் நாங்கள் எப்படி பட்ட கிராமத்தில் வசிக்கிறோம் என அப்படிப்பட்ட கிராமத்தில் 6 மாசம் விவசாயம் போக மீதி 6 மாசம் நாங்க சும்மா இருப்போம். அப்டி சும்மா இருக்கும் போது தான் இந்த யூடியூப் சேனல் நாங்க ஸ்டார்ட் பண்ணோம். இன்னைக்கு எங்களுக்கு 1 கோடி சப்ஸ்கிரைபேர்ஸ் கிடைச்சுருக்காங்க. நாங்க உழைப்பை போட்டாலும் ஒத்துழைப்பை போட்டது நீங்களே. எல்லா மக்களுக்கும் நாங்கள் நன்றி சொல்லிக்கொள்கிறோம் என கூறியுள்ளனர்.
ஏற்கனவே சில்வர் பட்டன்,கோல்டன் பட்டன் வாங்கியுள்ளோம் என அதையும் வீடியோவில் காண்பித்தனர். பின்னர் டைமண்ட் பட்டனை ஓபன் செய்து மிகவும் மகிழ்வுடன் தங்கள் ரசிகர்களுக்கு காட்டிய விதம் பார்வையாளர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ யூடியூபில் ட்ரெண்டிங்கில் முதல் இடம் பிடித்துள்ளது.