கொரானா பெருந்தொற்றால் இந்தியா மட்டுமல்லாமல் உலகநாடுகள் பலவும் உயிர்ச்சேதங்களையும், பொருளாதார சேதங்களையும் சந்தித்து வருகிறது.
இந்தியாவில் மத்திய மாநில அரசுகளின் வழிகாட்டுதலுடனும், பொதுமக்களின் பொறுப்புணர்வுடன், கூடிய ஒத்துழைப்பால் பெருமளவு பாதிப்பைத்தடுத்துள்ளோம்.
கொரானா நோய்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக ஆங்கிலமருத்துவமான அலோபதி மற்றும் பாரம்பரிய மருத்துவமான சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி மருத்துவர்கள் தங்கள் இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் பொதுமக்களுக்கு சேவைசெய்து வருகின்றனர்.
இந்நிலையில், மதுரை, அச்சம்பத்து பகுதியில் இயங்கி வரும் மது இன்ஸ்டிடி யுட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் சார்பாக மருத்துவர் பரத் அவர்கள் தலைமையில் MIMS ல் பயின்ற எலக்ட்ரோஹோமியோபதி மருத்துவர்கள் தமிழகம் முழுவதும் கொரோனோ தொற்றுபாதிக்கப்பட்ட பத்தாயிரதிற்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது மட்டுமில்லாமல் பத்தாயிரம் லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும் எலக்ட்ரோ ஹோமியோபதி இம்யூனிட்டி பூஸ்டர் வழங்கியும் உலக சாதனை படைத்துள்ளனர்.
இதுகுறித்து தென்திருப்பேரை ஹெஜோ ஹெல்த் அன்ட் நேச்சுரல் கியூர் மருத்துவரும் தென்னிந்திய எலக்ட்ரோ ஹோமியோபதி சங்கத்தின் செயலாளருமான டாக்டர். ஆரோக்கியபழம் கூறியதாவது,
MIMS ன் சேர்மன் மருத்துவர், பரத் என்பவர் அவருடைய கல்வி நிறுவனத்தின் மூலம் கேன்சர் ப்ரீ இந்தியா என்ற அமைப்பை நடத்தி அதன் மூலம் கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதாகவும் மற்றும் விதவைப்பெண்கள், பொருளாதாரத்தில் நலிவடைந்தோர்கள், மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இலவச கல்வியும் மற்றும் பல சேவைகளை செய்து வருகிறார். அது மட்டுமல்லாமல் இந்த விருது அவருக்கும் அவருடைய மருத்துவ குழுவினருக்கும் பொதுமக்களுக்கு சேவை செய்ய உந்துதலை கொடுக்கும் என கூறினார்.