• vilasalnews@gmail.com

தமிழகத்தில் உள்ள குழந்தைகள் காப்பகங்களில் ஆய்வு : அமைச்சர் கீதாஜீவன் உத்தரவு!

  • Share on

மதுரை தனியார் காப்பகத்தில் இருந்த குழந்தைகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த விவகாரத்தின் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள குழந்தைகள் காப்பகங்களில் ஆய்வு செய்ய அமைச்சர் கீதாஜீவன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் அளித்த பேட்டியில் :

மதுரை தனியார் காப்பகத்தில் இருந்த குழந்தைகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த விவகாரத்தில் குழந்தைகளை விலைக்கு வாங்கிய இரண்டு தம்பதிகள் மற்றும் காப்பக நிர்வாகி ஒருவர், இடைத்தரகர்கள் என மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குழந்தைகள் விற்பனை விவகாரம் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள தனியார் குழந்தைகள் காப்பகங்கள், முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் உள்ளிட்ட காப்பகங்களில் சமூக நலத்துறை அலுவலர்கள் மாவட்ட வாரியாக ஆய்வு நடத்தி 15 நாட்களுக்குள் அறிக்கை தர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

கள ஆய்வின்போது காப்பகங்கள் முறையாக அனுமதி பெற்று செயல்படுகிறதா? குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காப்பகங்களில் உள்ளவர்களின் பாதுகாப்பின் நிலை என்ன?அவற்றையெல்லாம் ஆய்வு செய்து அறிக்கை தர வேண்டும். அனுமதியின்றி செயல்படும் காப்பகங்கள் மீது அந்த அறிக்கையின் அடிப்படையில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

  • Share on

”கால் மீது கால் உரசி.. டபுள் மீனிங்..” கல்லூரி எச்.ஓ.டியின் பாலியல் தொல்லை..!

எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவர்கள் உலக சாதனை படைத்து அசத்தியுள்ளனர்.

  • Share on