• vilasalnews@gmail.com

”கால் மீது கால் உரசி.. டபுள் மீனிங்..” கல்லூரி எச்.ஓ.டியின் பாலியல் தொல்லை..!

  • Share on

திருச்சி பிஷர் ஹீபர் கல்லூரியில் பட்டமேற்படிப்பு மானவிகளிடம் பாலியல் இச்சையில் ஈடுபட்டதாக கல்லூரியின் தமிழ்துறை தலைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருச்சியில் புகழ் பெற்ற கல்லூரிகளில் பிஷர் ஹீபர் கல்லூரியும் ஒன்று, தென்னிந்திய திருச்சபையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த கல்லூரியில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் தமிழ் துறையின் எச்.ஓ.டியாக பேராசிரியர் பால் சந்திர மோகன் பணியாற்றி வந்தார். இவரிடம் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்க வரும் மாணவிகளிடம் பாலியல் சேட்டை செய்துள்ளார். மேலும், இது குறித்து கடந்த மார்ச் மாதம் புகார் அளித்த நிலையில், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


இந்த நிலையில், பத்மசேஷாத்திரி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், மாணவிகள் காவல்துறையில் புகார் அளித்தால் விவகாரம் பெரிதாகிவிடும் என அஞ்சிய நிலையில், மாணவிகளின் புகாரை விசாரிக்க 7 பேர் கொண்ட வக்கீல் குழு மூலம் உள் விசாரணை நடத்தினர். இதன் பெயரில் புகார் அளித்த 5 மாணவிகள், பேராசிரியர் பால் சந்திர மோகன் மற்றும் அவருக்கு உறுதுணயாக இருந்த தமிழ் உதவி பேராசிரியர் நளினி சுந்தரியிடம் விசாரணை நடந்தது.

ஐந்து மாணவிகளிடம் நடந்த விசாரனையில், பால் சந்திர மோகன் வகுப்பறையில் மிக நெருக்கமாக அமர்ந்து கொண்டு இரட்டை அர்த்தம் வரும் படி கொச்சையாக பேசுவதும், தங்கள் கால்களோடு உரசிக் கொண்டே நெருக்கம் காட்டுவது. அவரது அறைக்கு தனியாக செல்லும் மாணவிகளின் முன்னிலையில் அறை நிர்வாணமாக நிற்பதும், என ஆபாச சேட்டைகளை செய்துள்ளார். மேலும், தனது அறைக்கு வரும் மாணவிகளை நல்ல அழகா மேக்கப் போட்டு வர சொல்லி வற்புறுத்தியதும் தெரியவந்துள்ளது.


உதவி பேராசிரியராக இருக்கும் நளினி சுந்தரி, எச்.ஓ.டியை பார்க்க போகும் போது, முகம் கழுவி மேக்கப் போட்டுக் கொண்டு தான் போக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்த பாலியல் தொல்லையால் கல்லூரியை விட்டு வெளியேற விரும்புவதாகவும் அந்த மாணவிகள் வேதனையோடு தெரிவித்தனர்.

விசாரணையின் முடிவில் எச்.ஓ.டி பால் சந்திர மோகனின் பாலியல் தொல்லை உறுதியானதாக அந்த குழு தெரிவித்தது. இதனையடுத்து, பால் சந்திர மோகன பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதே சமயம் அவருக்கு உறுதுணையாக் இருந்த நளினி சுந்தரி மீது நடவடிக்கை மேற்கொள்ளப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பாக ஏடிசி (அடிஷ்னல் டெபுடி கமிஷனர்) வனிதா தலைமையில் ஒரு குழு அமைத்து விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். விசாரணையின் முடிவில் வழக்கு பதிவு குறித்து முடிவு செய்யப்படும் என தெரிகிறது.

  • Share on

தேமுதிக தோல்வியை கண்டு துவண்டு போவாது- பிரேமலதா விஜயகாந்த்

தமிழகத்தில் உள்ள குழந்தைகள் காப்பகங்களில் ஆய்வு : அமைச்சர் கீதாஜீவன் உத்தரவு!

  • Share on