ஸ்டாலின் வெளியிடப்பட்டிருக்கும் வாழ்த்து செய்தியில் கொரொனா பேரிடர் காலத்தில் மருத்துவர்கள் தேவை இன்றியமையாததாக உள்ளது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த பேரிடர் காலத்தில் மருத்துவர்கள் வெள்ளை உடையணிந்து ராணுவ வீரர் போல் பணியாற்றுவதாகவும் முதலமைச்சர் புகழ்ந்துள்ளார்.
தமிழ்நாட்டில் மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்தும் தமது அரசின் முயற்சிக்கு மருத்துவர்களின் ஒத்துழைப்பை கோருவதாகவும், தன்னலமற்ற மக்கள் நலன் காக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்களை வாழ்த்துவதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.