பிஷப் ஹீபர் கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றும் சந்திரமோகன் மீது மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியதையடுத்து அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சியில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரியில் தமிழ்த்துறையில் பட்டமேற்படிப்பு படிக்கும் சில மாணவிகள் சந்திரமோகன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி 5 பக்க அளவிலான புகார் மனுவை கல்லூரி முதல்வருக்கு அனுப்பியுள்ளார்.
அதில் சந்திரமோகன் வகுப்பறையில் மிக நெருக்கமாக அமர்ந்து இரட்டை அர்த்தத்தில் பேசியதாகவும், பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டுகின்றனர்.
வகுப்பறையில் குறைவான எண்ணிக்கையில் மாணவிகள் இருந்ததாகவும் தனது அறைக்கு வரும்படி கட்டாயப்படுத்தியதாக மாணவிகள் தங்களது குற்றச்சாட்டைக் கூறியுள்ளனர். அதே துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றும் நளினி, துறை தலைவர் பாலு சந்திரமோகனுக்கு உடந்தையாக இருப்பதாகவும் மாணவிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் கல்லூரியில் இருந்து வெளியேற விரும்புவதாகவும் அவர்கள் தங்கள் புகாரில் தெரிவித்து உள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கறிஞர் ஜெயந்தி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் குற்றச்சாட்டுக்கு உள்ளான பால் சந்திரமோகன் மற்றும் உதவிப் பேராசிரியை நளினி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி கல்லூரி முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் சந்திரமோகன் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
உதவி பேராசிரியை மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை தொடர்வதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக காவல்துறை முதல்கட்ட விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள்