அரசு பள்ளியில் மாணவ மாணவிகள் சேர்ந்து படிப்பதை ஊக்குவிப்பதற்காக தனது சொந்த நிதியிலிருந்து அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு தலா ரூ.1000 தொகையை பள்ளி தலைமை ஆசிரியர் வழங்கி வருகிறார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே ஈச நத்தத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது இங்கு தற்போது ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை 150க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜேசுதாஸ்.
இவர் அரசு பள்ளியில் மாணவ மாணவிகள் சேர்ந்து படிப்பதை ஊக்குவிப்பதற்காக இந்த ஆண்டு பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை சேரும் ஒவ்வொரு மாணவ மாணவிகளுக்கும் தன் சொந்த நிதியிலிருந்து ரூபாய் 1000 வழங்கிவருகிறார்.
அதுமட்டுமல்லாமல் தினமும் வீடுவீடாக சென்று மாணவ மாணவிகளை பள்ளியில் சேர்க்க பெற்றோரிடம் அறிவுறுத்தி வருகிறார் அந்த வகையில் நேற்று வரை 30 மாணவ மாணவிகளை வீட்டிற்கே சென்று பள்ளியில் சேர்த்துள்ளார்.
தலைமை ஆசிரியரின் இந்த செயலை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.