உலக அளவில் சிறந்த 100 மருத்துவ கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியலில் தமிழகத்தின் 2 கல்லூரிகள் இடம் பெற்று உள்ளன.
வேலூர் கிறிஸ்டியன் மருத்துவ கல்லூரி 49-வது இடத்திலும், சென்னை மருத்துவ கல்லூரி 64-வது இடத்தையும் பிடித்து உள்ளன. ஒட்டுமொத்தமாக இந்தியா அளவில் 6 மருத்துவ கல்லூரிகள் உலகின் சிறந்த 100 மருத்துவ கல்லூரி தரவரிசை பட்டியலில் இடம் பெற்று உள்ளது.
எய்மஸ் மருத்துவக் கல்லூரி 23-வது இடத்திலும், புனே ராணுவ மருத்துவக் கல்லூரி 34-வது இடத்தையும் பிடித்து உள்ளன. மேலும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி 59-வது இடத்தையும், வாரணாசி இந்தியன் இஸ்டியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவக் கல்லூரி 72-வது இடத்திலும் உள்ளன.