தமிழகத்தில் ஜூலை 5-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஊரடங்கு தளர்வுகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
அதன் முழு விவரம் பின்வருமாறு :
தமிழகத்தில் மொத்தமுள்ள 38 மாவட்டங்களும் கொரோனா பரவலின் அடிப்படையில் 3 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
வகை 1-ல் உள்ள 11 மாவட்டங்களில் உள்ள எது இயங்கும்? எது இயங்காது என்பது குறித்த விவரம் :
வகை 1 மாவட்டங்கள்:
கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை
* தேனீர் கடைகளில் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை பார்சல் சேவைக்கு அனுமதி
* மின்பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை அனுமதி
* ஹார்டுவேர் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை அனுமதி
* கல்வி பொருட்கள், புத்தகங்கள் விற்பனை காலை 9 மணி முதல் 7 மணி வரை அனுமதி
* காலணிகள் விற்பனை செய்யும் கடைகள் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை அனுமதி
* பாத்திரக்கடைகள், அழகு சாதன பொருட்கள், ஜெராக்ஸ் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை அனுமதி
* டிவி, மிக்சி உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை, பழுது நீக்கு கடைகள் காலை 9 மணி முதல் 7 மணி வரை அனுமதி
* வாகன விநியோகஸ்தர்கள், விற்பனை, வாகன பழுதுபார்க்கும் மையங்கள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை அனுமதி
வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை அனுமதி
* செல்போன் மற்றும் அதனை சார்ந்த விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை அனுமதி
* கணிணி மென்பொருட்கள், உதிரி பாகங்கள் மற்றும் அது சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை அனுமதி
* சாலையோர உணவு கடைகளில் பார்சல் சேவை மட்டும் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை அனுமதி
* கட்டுமான பொருட்கள் விற்பனை கடைகள் செய்யும் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை அனுமதி
* அரசின் அத்தியாவசிய துறைகளின் பணிகள் 100 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதி, இதர அரசு அலுவலகங்கள் 50 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதி
* சார்பதிவாளர் அலுவலகங்கள் 100 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதி
* அனைத்து தனியார் அலுவலகங்கள், நிறுவனங்கள் 50 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதி
* வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், எடிஎம் சேவைகள் 50 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதி
* இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) அதன் செயல்பாடுகள் 50 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதி
* ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருட்கள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 100 சதவிகித பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி
* இதர தொழிற்சாலைகள் 33 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதி
* தகவல் தொழில்நுடபம் (ஐடி), தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் 50 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதி
* வீட்டு வசதி நிறுவனம், வங்கி சாரா நிதி நிறுவனம் குறு நிதி நிறுவனங்கள் 33 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதி
* கட்டுமான பணிகளில் மேற்கொள்ளும் நிறுவனங்களின் அலுவலகங்கள் 33 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதி
* அனைத்து வகையான கட்டுமான பணிகளுக்கும் அனுமதி
* அழகு நிலையங்கள், சலூன்கள் குளர்சாதன வசதி இன்றி ஒரே நேரத்தில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை அனுமதி
* காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை விளையாட்டு பயிற்சி குழுமங்கள் இயங்கவும், பார்வையாளர்கள் இன்றி திறந்த வெளியில் விளையாட்டுப்போட்டிகள் நடத்தவும் அனுமதி
* பள்ளி, கல்லூர்கள், பல்கலைக்கழகங்கள், பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பான பணிகள் அனுமதி
* அரசு பூங்காக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள், விளையாட்டுத்திடல்கள் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை நடைபயிற்சிக்கு மட்டும் அனுமதி
* இனிப்பு, காரவகை விற்பனை செய்யும் கடைகளில் பார்சல் சேவைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனுமதி
* இ-சேவை மையங்கள் வழக்கம் போல் இயங்கும்
* ஆன்லைன் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள், உணவகங்கள் மற்றும் அடுமனைகள் பார்சல் சேவைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனுமதி
* இ-காமர்ஸ் (மின்வணிக சேவை நிறுவனங்கள்) அனைத்தும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனுமதி
* திரைப்பட தயாரிப்புக்கு பின்னர் உள்ள பணிகள் அனுமதி
* திறந்த வெளியில் திரைப்படம், சின்னத்திரை படப்பிடிப்பு கலைஞர்கள், பணியாளர்கள் உள்பட 100 நபர்கள் மட்டும் கொரோனா ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொண்ட பின்னர் பங்கேற்கலாம் என்ற நிபந்தனையுடன் அனுமதி
* திரையரங்குகளில் தொடர்புடைய வட்டாச்சியரின் அனுமதி பெற்று வாரத்தில் ஒருநாள் மட்டும் பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதி
வகை 2-ல் உள்ள 23 மாவட்டங்களில் உள்ள எது இயங்கும்? எது இயங்காது என்பது குறித்த விவரம் :
வகை 2 மாவட்டங்கள்:
அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர்
* பாத்திரக்கடைகள், பேன்சி, அழகுசாதன பொருட்கள், போட்டோ, வீடியோ, சலவை, தையல், அச்சகம், ஜெராக்ஸ் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதி
* செல்பேசி மற்றும் அதனை சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதி
* கணினி வன்பொருட்கள், மென்பொருட்கள் மின்னணு சாதங்களில் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதி
* சாலையோர உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை அனுமதி
* அனைத்து தனியார் நிறுவனங்கள் 50 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதி
* கட்டுமான பணிகள் மேற்கொள்ளும் நிறுவனங்களில் அலுவலகங்கள் 50 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதி
* மாவட்டத்திற்குள் பொதுப்பேருந்து போக்குவரத்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி குளிர்சாதன வசதி இல்லாமலும் 50 சதவிகித இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க செயல்பட அனுமதி
* மாவட்டங்களுக்கு இடையே பொதுப்போக்குவரத்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி குளிர்சாதன வசதி இல்லாமலும் 50 சதவிகித இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க செயல்பட அனுமதி
வகை 3-ல் உள்ள 4 மாவட்டங்களில் உள்ள எது இயங்கும்? எது இயங்காது என்பது குறித்த விவரம்
வகை 3 மாவட்டங்கள்:
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள்
* அனைத்து தனியார் நிறுவனங்கள் 100 சதவிகித பணியாளர்களுடன் இயங்க அனுமதி
* அனைத்து துணிக்கடைகள் குளிர்சாதன வசதி இல்லாமலும், ஒரு நேரத்தில் 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதி
* அனைத்து நகைக்கடைகள் குளிர்சாதன வசதி இல்லாமலும் ஒரு நேரத்தில் 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதி
* வணிக வளாகங்கள் ( ஷாப்பிங் காம்பிளக்ஸ், மால்ஸ்) காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதி. எனினும் வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களில் பார்சல் உணவு மட்டும் அனுமதிக்கப்படும்.
* திரையரங்குகள், விளையாட்டுக்கூடங்களுக்கு அனுமதி இல்லை.
* கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு தளங்களுக்கும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி
* அர்ச்சனை, திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நடத்த அனுமதி இல்லை.
* காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை விளையாட்டு பயிற்சி குழுமங்கள் இயங்கவும், பார்வையாளர்கள் இல்லாமல் திறந்த வெளியில் விளையாட்டுப்போட்டிகள் நடத்தவும் அனுமதி
வகை 2 மற்றும் வகை 3-ல் உள்ள மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளுக்கான நேரத்தளர்வுகளுடன் கூடுதலாக கீழ்கண்ட செயல்பாடுகளும் அனுமதி அளிக்கப்படுகிற்து.
வகை 2, வகை 3 மாவட்டங்களுக்கு கூடுதல் தளரவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
வகை 2, வகை 3 மாவட்டங்கள்:
அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர், விருதுநகர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள்
* தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் (ஹவுஸ் கீப்பிங்) இ-பதிவு இல்லாமல் செயல்பட அனுமதி
* மின்பணியாளர், எலக்டிரிஷியன், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் மோட்டார் டெக்னிசியன்ஸ் மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் சேவை கோருபர் வீட்டுகளுக்க்கு சென்று பழுது நீக்கம் செய்ய காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை இ-பதிவு இல்லாமல் அனுமதி
* அனைத்து அரசு அலுவலகங்கள் 100 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதி
* வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள், எடிஎம் சேவைகள் 100 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதி
* இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) மற்றும தன் செயபாடுகள் 100 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதி
* இதர தொழிற்சாலைகள் 100 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதி
* தகவல் தொழில்நுடபம் (ஐடி), தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் 50 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதி
* வீட்டு வசதி நிறுவனம், வங்கி சாரா நிதி நிறுவனம், குறு நிதி நிறுவனங்கள் 50 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதி
* உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள், குளிர்சாதன வசதி இல்லாமலும், ஒரேநேரத்தில் 50 சதவிகித நபர்களுடன் முறையான வழிகாட்டு நெறிகளை பின்பற்றி வழக்கமாக செயல்படும் நேரத்தில் அனுமதி
* அருங்காட்சியகங்கள், தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி
இது தவிர்த்து 3 வகைகளில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் பொதுவான சில அறிவிப்புகள் வந்துள்ளன. அவைகள் பின்வருமாறு :
* அனைத்து கடற்கரைகளிலும் காலை 5 மணி முதல் காலை 7 மணி வரை நடைபயிற்சி செய்ய அனுமதி
* தீப்பெட்டி தொழிற்சாலைகள் 100 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதி
திருமணங்களுக்கான பயண அனுமதி குறித்த தகவல்கள் :
* வகை 2 மற்றும் வகை 3-ல் உள்ள மாவட்டங்களுக்கு இடையே திருமணம் சார்ந்த போக்குவரத்திற்கு இ-பாஸ் (இ-பதிவு) இல்லாமல் பயணிக்கலாம்
* வகை 2 மற்றும் 3-ல் உள்ள மாவட்டங்களில் இருந்து வகை 1-ல் உள்ள மாவட்டங்களுக்க்கு திருமணம் சார்ந்த போக்குவரத்து செல்ல இ-பாஸ் கட்டாயம்
* திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே அனுமதி
* நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசரகாலங்களுக்கு பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து இ-பாஸ் பெற்று பயணிகலாம்.
என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.