தமிழகம் முழுவதும் நாளை அரசு பொது விடுமுறை அறிவிக்கப்படுகிறது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் நிவர் புயல் மையம் கொண்டிருக்கிறது. இந்த புயல் அதி தீவிர புயலாக மாறிவிட்டது. இந்த நிலையில் புயலின் தன்மை குறித்து அறிய சேப்பாக்கத்தில் உள்ள புயல் கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்தார். அவருடன் சுகாதாரத் துறை அமைச்சர் சி விஜயபாஸ்கரும் வந்திருந்தார். அப்போது புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பார்வையிட்டார். அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்:
நிவர் புயல் காரணமாக நாளை அரசு பொது விடுமுறை. அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் இயங்காது. மக்கள் யாரும் தேவையின்றி வெளியே வர வேண்டாம். மழை பொழிவை பொறுத்து செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து அறிவிக்கப்படும் என முதல்வர் கேட்டு கொண்டார்.