• vilasalnews@gmail.com
Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

“ஊரடங்கில் என்ன செய்யும் வாயில்லா ஜீவன்கள்?” : வாயில்லா ஜீவன்களின் பசியை போக்க உணவளிக்கும் மதுரை இளைஞர் "கே.எஸ்.கிச்சன்" சங்கர்!!

  • Share on

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் வாயில்லா ஜீவன்களுக்கு மதுரையில்  இளைஞர் ஒருவர் உணவளித்து வரும் சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை அரசு தீவிரமாக எடுத்து வருகின்றது. அதேவேலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையிழந்து தவித்து வருபவர்களுக்கு, ஆரவற்றவர்களுக்கும் பல்வேறு உதவிகளை அரசு சார்பிலும் மற்றும் சில தொண்டு நிறுவனங்களும் செய்துவருகின்றனர்.


ஆனால், ஊரடங்கு காரணமாக சாலைகளில் சுற்றி திரியும் நாய்கள், மாடுகள்,குரங்குகள் ,யானைகள்,மயில்   போன்ற வாயில்லா ஜீவன்களை பெரும்பாலும் யாரும் கண்டுக் கொள்ளவில்லை. இந்நிலையில், மதுரையில்  உள்ள இளைஞர் கே எஸ் கிச்சன் நிறுவன உரிமையாளர் சங்கர் தமது நண்பர்கள் சிவசங்கர் ,சூர்ய பிரகாஷ் ஆதரவுடன்   சாலைகளில் திரியும் 200-க்கும் மேற்பட்ட வாயில்லா ஜீவன்களுக்கு உணவு அளித்து வருகின்றார்.

மதுரையில் தொழில்துறை, திரைத்துறை என அனைத்து துறையிலும் முத்திரை பதித்து வரும் சங்கர்  இந்த பணியை தொடந்து செய்து வருகிறார். இவருக்கு  சிறுவயதில் இருந்தே வாயில்லா ஜீவன்களுக்கு உணவு அளிக்கும் பழக்கம் இருந்துள்ளது.


இதனிடையே அலுவலகம் செல்லும் போது தனது சொந்த செலவில் சாலைகளில் உள்ள பிராணிகளுக்கு உணவு வாங்கி பசியை போக்கியுள்ளார். இந்நிலையில் ஊரடங்கு கொண்டு வந்ததால், தனது வீட்டிலேயே உணவு சமைத்து மதுரை  சாலையில் உள்ள நாய்களுக்கு, பறவைகளுக்கு உணவு அளித்துள்ளார்.

இவர் தினமும் பருப்பு சாதம், பெடிகிரி, பிஸ்கட், வாழைப்பழம், போன்ற உணவுகளை கொண்டுவந்து காகித தட்டில் வைத்து நாய்களுக்கு ருசியான உணவு வழங்கி வருகிறார். இவரின் இந்த முயற்சிக்கு ஆதரவு அளித்து போலிசாரும் அவரை பாராட்டி எதுவும் கேட்காமல் விட்டுவிடுகின்றனர்.


அதேப்போல் அவரின் நண்பர்களுக்கு அரிசி, பிஸ்கட் போன்றவற்றை வழங்கி உதவி செய்துவருகின்றனர். இவரின் இந்த முயற்சிக்கு பலரும் வாழ்த்துக் களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துவருகின்றனர்.

  • Share on
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

டெய்லர் கள்ளக்காதலுடன் சேர்ந்து டெகரேஷன் கணவனை கழுத்தறுத்து கொன்ற அழகு நிலைய மனைவி!

"ரூ.3,500 உதவி தொகை தமிழக அரசு அறிவிப்பு"... பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்!!

  • Share on