• vilasalnews@gmail.com
Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

டெய்லர் கள்ளக்காதலுடன் சேர்ந்து டெகரேஷன் கணவனை கழுத்தறுத்து கொன்ற அழகு நிலைய மனைவி!

  • Share on

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் கோதண்டபாணி நிரோஷா தம்பதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. கோதண்டபாணி வீடுகளுக்கு இன்டீரியர் டெகரேஷன் ( உள் அலங்காரம் ) செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த 19ஆம் தேதி கோதண்டபாணி தனது வீட்டு மாடியில் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரை மர்ம நபர் ஒருவர் கொலை செய்துவிட்டு தப்பியதாக அவரது மனைவி நிரோஷா போலீசில் தகவல் அளித்தார். 

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கோதண்டபாணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணத்தை விசாரித்து வந்தனர். அப்போது கணவன் கொலையில் மனைவிக்கு உடன் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்த போலீசார் மனைவி நிரோஷாவிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் நிரோஷா தனது கள்ளக்காதலன் மணிகண்டன் என்பவரும் இணைந்து இந்த கொலையை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கணவரை கொலை செய்தது எப்படி? என்று நிரோஷா போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார். அதன் விவரம் வருமாறு:-

எனது கணவர் மாதத்தில் 15 நாட்கள் வேலை இல்லாமல் வீட்டில் சும்மா இருப்பார். வேலைக்கு போனால்தான் சம்பளம். அவர் சம்பாத்தியம் குடும்பம் நடத்த போதவில்லை. இதனால் அழகு நிலையம் ஒன்றில் நானும் வேலை பார்த்தேன்.

நான் வேலை பார்த்த அழகு நிலையம் அருகில்தான், மணிகண்டனின் டெய்லர் கடை இருந்தது. அவரிடம் ஜாக்கெட் தைக்க கொடுப்பேன். ஜாக்கெட்டுக்கு அளவு எடுப்பது போல, என்னை தொடக்கூடாத இடங்களில் எல்லாம் தொடுவார். அதில் இருந்து நாங்கள் காதலிக்க தொடங்கினோம். அவருக்கு நல்ல வருமானம் வந்தது. அதை என்னிடம் கொடுப்பார். அவரோடு ரகசியமாக சேர்ந்து வாழ முடிவு செய்து, வாழ்ந்தேன். அவருக்கு திருமணம் ஆகி விட்டதாக வெளியில் பொய் சொன்னார். ஆனால் அவருக்கு திருமணம் ஆகவில்லை.

காதல் விவகாரம் வெளியில் தெரிந்து எனது கணவர் நெருக்கடி கொடுத்தார். எனவே அவரை தீர்த்துக்கட்ட திட்டம் போட்டோம். திட்டப்படி எனது கணவரை பால்கனிக்கு தனியாக அழைத்துச் சென்று படுக்கவைத்தேன்.

நானும் அவரோடு படுத்து கொண்டேன். மணிகண்டன் வந்ததும் செல்போனில் கூப்பிட்டார். உடனே கதவை நான்தான் திறந்து விட்டேன். தூக்கத்திலேயே அவரை தீர்த்துக்கட்டி விட்டோம். மணிகண்டனை தப்பிக்க விட்டு, விட்டு நான் நாடக மாடினேன். ஆனால் போலீசார் உண்மையை கண்டுபிடித்து விட்டனர்.

இவ்வாறு அவர் வாக்குமூலம் கொடுத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதன்பேரில் நிரோஷா கைது செய்யப்பட்டார். நீதிமன்ற காவலில் அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். தப்பி ஓடிய மணிகண்டனை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

  • Share on
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

ஆணி பலகை, தலைகவசத்தில் யோகா செய்து அசத்திய சகோதரர்கள்

“ஊரடங்கில் என்ன செய்யும் வாயில்லா ஜீவன்கள்?” : வாயில்லா ஜீவன்களின் பசியை போக்க உணவளிக்கும் மதுரை இளைஞர் "கே.எஸ்.கிச்சன்" சங்கர்!!

  • Share on