தமிழகத்தில் உள்ள 3000 தொழு நோயாளிகளுக்கு, அவர்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசிகளை செலுத்தும் பணி நாளை முதல் தொடங்க இருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் குழந்தைக ளுக்கான கொரொனா சிகிச்சை பிரிவை திறந்து வைத்த பின், செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது :
சென்னை மாநகராட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதே போல் தமிழகத்தைப் பொருத்தவரை 3000 தொழுநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அவர்களுக்கென்று ஒரு ஸ்பெஷல் கேம்ப் சோழிங்கநல்லூரில் தொடங்க இருக்கிறோம். 10 நாட்களுக்குள் அந்த 3000 தொழு நோயாளிகளுக்கும் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.