• vilasalnews@gmail.com

மதுரை கிழக்கு தாலுகா அயிலாங்குடி ரேஷன் கடை ஊழியரின் அடாவடித்தனம் : உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!!

  • Share on

தமிழக அரசு அறிவித்துள்ள  கொரோனா நிவாரணத்தொகை இரண்டாம் தவணை தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் முறையாக வழங்கப்படுவதோடு 14 வகை தொகுப்புகள் அடங்கிய பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் மதுரை கிழக்கு தாலுகா அயிலா ங்குடி  கிராமத்தில்  ரேஷன்  கடை ஊழியராக பணியாற்றி வரும் நெய்வன் தொடர்ந்து அடாவடித் தனத்தில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்களிடம் இருந்து புகார் வந்துள்ளது.

இக்கடையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்லும் குடும்ப அட்டைதாரர்கள் கேட்கும் பொருட்களை வழங்க மறுத்து இருப்பு இல்லை என கூறி விடுவதாகவும், வேறு நாளில் பெற்றுக் கொள்ளுமாறு திருப்பி அனுப்பி விடுவதாகவும் கூறப்படுகிறது.

மேலும், சில நாட்கள் கழித்து சென்றாலும் அதே பதிலை அளித்து பொருட்கள் வழங்குவதில்லை. இது குறித்து கேட்டால் நெய்வன் மிரட்டும் தோணியில் பேசி வருகிறார். பொருட்கள் வாங்காமலேயே குடும்ப அட்டைதாரர்களின் அலை பேசிக்கு பொருட்கள் பெற்றதாக குறுஞ்செய்தி வருகிறது.

குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டிய பொருட்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக புகார் தெரிவிக்கின்றனர். கடைக்கு ஒதுக்கீடு செய்துள்ள குடும்ப அட்டை மற்றும் 'அ' பதிவேடு பொருட்கள் இருப்பு விற்பனை பதிவேடு உள்ளிட்ட அனைத்து பதிவேடுகளையும் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புகாருக்குள்ளான ரேஷன் கடை ஊழியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து அவரை மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த புகார்கள் குறித்து விளக்கம் கேட்க நெய்வனை தொலைபேசியில் அழைத்தபோது எல்லாம் சரியாகத் தான் நடக்குது உங்ககிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. என் மேல யாரும் நடவடிக்கை எடுக்க முடியாது என திமிராக பேசி  அழைப்பை கட் செய்து விடுகிறாராம்.

இந்த பேரிடர் காலத்திலும் இது போன்று அடாவடித்தனத்தை மேற்கொண்டு வரும் அவர் மீது உரிய நடவடிக்கை பாயுமா? என்பது தற்போது  கேள்வியாக உள்ளது.

  • Share on

பேருந்து சேவைக்கு அனுமதி? -முதல்வர் ஆலோசனை

தொழு நோயாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

  • Share on