• vilasalnews@gmail.com

தாமதப்பட்ட நீதியையாவது தாருங்கள்.. பேரறிவாளனை விடுவியுங்கள்: கமல்ஹாசன் ட்வீட்

  • Share on

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தாமதப்பட்ட நீதியையாவது தாங்கள். பேரறிவாளனை விடுவியுங்கள் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழரை விடுதலை செய்யலாம் என்ற தமிழக அரசின் முடிவுக்கு 2 ஆண்டுகளாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் தராமல் உள்ளார். இதற்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது.

இந்த வழக்கில் பேரறிவாளனின் பரோலை 1 வாரம் நீட்டித்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்று கமல்ஹாசன் தமது ட்விட்டர் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார்.


சட்ட விசாரணை சரியாக நடந்ததா என்கிற சந்தேகத்துடனேயே பேரறிவாளனின் 30 ஆண்டு சிறைவாசம் முடியாமல் தொடர்கிறது.சட்ட,நீதி மன்றங்கள் கருத்தைக் கூறிவிட்டன.கவர்னர் எனும் ஒற்றை மனிதரின் கையொப்பம் எதற்காகக் காத்திருக்கிறது?

பரவாயில்லை,தாமதப்பட்ட நீதியையாவது தாருங்கள். பேரறிவாளனை விடுவியுங்கள். இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

  • Share on

பணம் இருப்பவர்களுக்கு மட்டும்தான் காவல்துறை பாதுகாப்பு தருமா? ஏழை மக்கள் எங்கே செல்வார்கள்...!! உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்தவரின் மகனுக்கு அரசு பணி ஆணை: தமிழக முதல்வா் வழங்கினார்

  • Share on