சிறுவர், சிறுமிகளை ஆபாசமாக பேசியதாக தர்மபுரியில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன் சென்னை மாநகர அலுவலகத்திற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.
தடை செய்யப்பட்ட பப்ஜியை சட்டவிரோத இணையதள இணைப்பு மூலம் விளையாடி பல சிறுவர் சிறுமிகளை ஆபாசமாக பேசியது தொடர்பாக அதன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக மனைவி கிருத்திகா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தர்மபுரி மாவட்டம் என்ற இடத்தில் மதன் கைது செய்யப்பட்டார். அங்கிருந்து யூடியூப் மதனை மாலை 7 மணிக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனர்.
அப்போது செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு காட்சிகளை பதிவு செய்த பொழுது நான் என்ன பிரதமரா என்றும் எதற்காக இப்படி படம் எடுக்கிறீர்கள் என்று மதன் கேட்டுள்ளார். அப்போது அவரைப் பிடித்த காவல் ஆய்வாளர் நீ குற்றவாளி எனக் கூறி அதனை உள்ளே அழைத்துச் சென்றார்.