கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் காவி உடையணிந்த திருவள்ளுவர் படம் வைக்கப்பட்டு இருந்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அந்தப்படம் தற்பொழுது மாற்றப்பட்டுள்ளது.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக நூலக வாயிலில், காவி உடையணிந்த திருவள்ளுவர் படம் வைக்கப்பட்டு இருந்தது. எந்த அடையாளமும் இல்லாத வெள்ளை உடை அணிந்த திருவள்ளுவர் படமே தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டது.
இந்நிலையில் காவி உடை அணிந்த திருவள்ளுவர் படம் நூலக வாயிலில் இருந்ததால் அது சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த திருவள்ளுவர் படம் பல ஆண்டுகளாக இவ்வாறுதான் இருந்து வருகிறது என பல்கலைக்கழக நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் காவி உடை அணிந்த திருவள்ளுவர் படம் அகற்றப்பட்டு தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட வெள்ளை உடை அணிந்த திருவள்ளுவர் படம் வைக்கப்பட்டதாக அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்தார்.