வெகு விரைவில் திருக்கோவில்களை திறக்கும் அறிவிப்பை தமிழக முதலமைச்சர் வெளியிடுவார் என இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு தெரிவிக்கையில் :
கொரோனா என்னும் பேரிடர் ஆட்கொல்லி நோயை தமிழக முதலமைச்சர் தனது ஓயாத உழைப்பால், தொலைநோக்குத் திட்டத்தால் தற்போது வென்றெடுத்து வருகிறார். இன்னும் ஒரு வார காலத்திற்குள் முற்றிலுமாக இந்த நோய்த்தொற்று விரட்டப்படும் என்று நம்பிக்கை தெரிவித்த அமைச்சர் சேகர்பாபு, தமிழக முதலமைச்சர் வெகுவிரைவில் திருக்கோவில்கள் திறக்கின்ற நல்ல பணியை அவர் மேற்கொள்வார் எனவும் தெரிவித்தார்.