பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்த ஆசிரியைகளின் பட்டியலை சிபிசிஐடி போலீசார் சேகரித்து வருகின்றனர்.
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், சிவசங்கர் பாபா மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை விசாரணை செய்வதற்காக சிபிசிஐடி போலீசார் டேராடூன் சென்று இருக்கின்றனர்.
பள்ளியில் மொத்தம் 73 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் இவருக்கு உதவியதாக ஏற்கனவே பாராதி, தீபா என இரண்டு ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில், சிவசங்கர் பாபாவிற்கு உதவிய மேலும் சில ஆசிரியைகள் யார் யார் என்ற பட்டியலை பாதிக்கப்பட்ட மாணவிகள் அளித்த வாக்குமூலத்தில் அடிப்படையில் சேகரிக்கும் பணியில் சிபிசிஐடி போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.