• vilasalnews@gmail.com

ஆதார்-பான் இணைப்பு : ஜூன் 30 கடைசி தேதி

  • Share on

ஆதார் அட்டை மற்று பான் அட்டைகளை இணைக்கும் அவகாசம் ஜூன் 30 ஆம் தேதியுடன் நிறைவடைவதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

பான் எண்ணுடன், ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்கவேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி 2019, செப்டம்பர் 30, அக்டோபர் 1 , ஜூன் 30 என பலமுறை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டு விட்டது. இருப்பினும் பலர் இன்னும் பான் – ஆதார் எண்ணை நீட்டிக்காமல் உள்ளனர்.

அந்த வகையில் இறுதியாக மார்ச் 31 ஆம் தேதிக்குள் ஆதாருடன் பான் எண்ணை இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை அறிவித்தது. அதன்பின் கொரோனா பரவலால் அந்த அவகாசமும் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது ஆதார் அட்டை மற்று பான் அட்டைகளை இணைக்கும் அவகாசம் ஜூன் 30 ஆம் தேதியுடன் நிறைவடைவதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது. அவ்வாறு இணைக்க தவறினால் உங்கள் பான் எண்ணை நீங்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் என்றும் வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share on

ஈரோடு பார்முலாவை மதுரையிலும் பயன்படுத்துவாரா புதிய காவல் துணை ஆணையர்!

“எந்த நேரமும் 3ஆம் அலை குழந்தைகளை தாக்கலாம்; தயாராக இருங்கள்” – தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!

  • Share on