• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் அரசு ஊழியர்கள் 3வது நாளாக தொடர் போராட்டம் - சாலை மறியல்

  • Share on

தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக 3வது நாளான இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, அனைவருக்கும் பழைய பென்சன் திட்டத்தை தொடர வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம் பெறும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். 

அரசு துறையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்ட அரசு ஊழியர் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

மேலும், ஆனால் அரசு ஊழியர்கள் தாலுகா அலுவலக வளாகத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.  இந்நிலையில், இன்று 3வது நாளாக போராட்டம் தொடர்கிறது. அரசு ஊழியர்கள் தூத்துக்குடி பாளை ரோட்டில் மறியல் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட 211 பேரை போலீசார் கைது செய்தனர். 

  • Share on

உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி

இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இங்கிலாந்து அணி சிறப்பான தொடக்கம் - ஜோ ரூட் சதம் அடித்து அசத்தல்

  • Share on