• vilasalnews@gmail.com

தமிழக அணியில் மீண்டும் நடராஜன்

  • Share on

18ஆம் தேதி தொடங்க இருக்கும் விஜய் ஹசாரே கோப்பை போட்டிக்கு தமிழக அணியில் டி. நடராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் நடைபெற்றது. இதில் தமிழக அணி மகுடம் சூடியது.

இந்நிலையில், விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி வருகிற 18-ஆம் தேதி தொடங்கும் என்று தெரிகிறது. விஜய் ஹசாரே கோப்பை  தொடருக்கான தமிழக அணியை, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்வு கமிட்டி தேர்வு செய்து நேற்று அறிவித்தனர்.

முஷ்டாக் அலி கோப்பை போட்டியில் ஆடாத இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான சேலம் சின்னப்பம்பட்டியை  சேர்ந்த டி.நடராஜன் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார்.

தமிழக அணியில் இருந்து  கேப்டன் தினேஷ் கார்த்திக், துணை கேப்டன் பாபா அபராஜித், பாபா இந்த்ரஜித், அருண் கார்த்திக், ஹரி நிஷாந்த், ஷாருக்கான், ஜெகதீசன், சூரியபிரகாஷ், கவுசிக் காந்தி, முருகன் அஸ்வின், கவுசிக், சாய் கிஷோர், சித்தார்த், சோனு யாதவ், விக்னேஷ் டி.நடராஜன், அஸ்வின் கிறிஸ்ட், பிரதோஷ் ரஞ்சன் பால், பெரியசாமி மற்றும் முகமது ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

  • Share on

பிரிஸ்பேன் டெஸ்ட்: புஜாராவுக்கு கவாஸ்கர் பாராட்டு

உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி

  • Share on