திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியம் அய்யம்பாளையத்தில், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் இ.பெரியசாமின் 71 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு 11 ஆம் ஆண்டு மாபெரும் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்படுகிறது.
இந்த பந்தயமானது, வருகிற 20.1.24 மற்றும் 21.2.24 ஆகிய இரு நாட்கள் நடைபெறும் என முன்பு அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், திமுக மாநில இளைஞர் அணி மாநாடு வருகின்ற 21.1.2024 அன்று நடைபெறக்கூடிய காரணத்தால்,
20.1.24 மற்றும் 21.2.24 ஆகிய இரு தேதிகளுக்கு பதிலாக, 13.1.2024 சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கும் மற்றும் 14.1.2024 ஞாயிறுக்கிழமை காலை 7 மணிக்கும் என இரு தினங்களில் நடைபெறும் என அய்யம்பாளையம் மாட்டு வண்டி பந்தயக்குழு சர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக புதிய பந்தய நோட்டிஸ் அச்சடிக்கப்பட்டு, பந்தய மாட்டின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.