• vilasalnews@gmail.com

ஆசிய வில்வித்தை போட்டியில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம்

  • Share on

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 

இந்நிலையில், இன்று நடைபெற்ற வில்வித்தை கலப்பு இரட்டையர் காம்பவுண்ட் பிரிவில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது.

ஜோதி சுரேகா வெண்ணாம், பிரவீன் ஓஜஸ் ஆகியோர் 159-158 என்ற புள்ளிக் கணக்கில் கொரியாவை வீழ்த்தினர்.

இந்திய அணி 16 தங்கம், 26 வெள்ளி, 29 வெண்கலம் என மொத்தம் 71 பதக்கங்களைப் பெற்றுள்ளது. இதுவரை இல்லாத அளவில் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா அதிக பதக்கங்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Share on

ஆசிய போட்டிகள்.. முதல் தங்கத்தை வென்ற இந்தியா.. சீனாவின் சாதனையை முறியடித்து அசத்தல்!

டி20 உலகக்கோப்பை 2024.. இந்திய அணியின் முழு அட்டவணை.. ஐசிசி அறிவிப்பு!

  • Share on