• vilasalnews@gmail.com

கிறிஸ்டியானோ ரொனால்டோ தொழில்முறை போட்டிகளில் 750வது கோலை அடித்து புதிய சாதனை..!

  • Share on

போர்ச்சுகலைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தொழில்முறை போட்டிகளில் தனது 750வது கோலை அடித்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

இத்தாலியின் யுவன்டஸ் கிளப் அணிக்காக விளையாடி வரும் அவர், நேற்று நடைபெற்ற டைனமோ கீவ் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் போட்டியில் இந்த சாதனையை படைத்துள்ளார்.

மேலும், சாம்பியன்ஸ் லீக் குரூப் சுற்று போட்டிகளில் தனது 71வது கோலை பதிவு செய்த ரொனால்டோ, அதிக கோல்கள் அடித்த மெஸ்ஸியின் சாதனையையும் முறியடித்தார்.

இந்த போட்டியில் கள நடுவராக செயல்பட்ட ஸ்டெபனி ப்ரபார்ட், ஆண்கள் சாம்பியன்ஸ் லீக் தொடரில் பணியாற்றிய முதல் பெண் நடுவர் என்ற பெருமையை பெற்றார்.

  • Share on

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி: 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

கடைசி நேரம் வரை ஏன் களத்தில் நிற்க வேண்டும் என்று கற்றுக்கொடுத்துள்ளார் தோனி - ஜடேஜா பரபர பேட்டி!

  • Share on