• vilasalnews@gmail.com

ஒலிம்பிக் 2020.. தொடரும் சீனாவின் ஆதிக்கம்.. பதக்க பட்டியலில் முதலிடம்.. இந்தியாவிற்கு 60வது இடம்!

  • Share on

ஒலிம்பிக் 2020 தொடரில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 21 தங்கம் உட்பட 46 பதக்கங்களுடன் சீனா முதலிடம் வகித்து வருகிறது.

2020 ஒலிம்பிக் தொடர் இந்தியாவிற்கு தோல்விகரமான தொடர்களில் ஒன்றாக அமைந்து உள்ளது. இதுவரை இந்தியா ஒரு வெள்ளிப்பதக்கம் மட்டுமே வாங்கி உள்ளது. பளு தூக்குதல் பிரிவில் இந்தியாவிற்காக மீராபாய் சானு பதக்கம் வாங்கி உள்ளார்.

இதுபோக பாக்சிங் பெண்கள் பிரிவில் லோவ்லினா பதக்கம் வாங்கும் வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளார். இன்னொரு பக்கம் பேட்மிண்டன் பெண்கள் பிரிவில் சிந்து வெண்கலப்பதக்கம் வாங்கும் வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளார்.

இதை தவிர இந்தியாவிற்கு தற்போது வேறு பதக்கங்கள் எதுவும் கிடைக்கும் சூழ்நிலை இல்லை. இந்திய ஹாக்கி ஆண்கள் அணி கொஞ்சம் நம்பிக்கை அளித்து வருகிறது. இந்த தொடரில் 21 தங்கம் உட்பட 46 பதக்கங்களுடன் சீனா முதலிடம் வகித்து வருகிறது.

அமெரிக்கா 18 தங்கம் உட்பட 50 பதக்கங்களுடன் 2ம் இடம் வகித்து வருகிறது. டாப் மூன்று இடங்களுக்கு அமெரிக்கா, சீனா, ஜப்பான் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்தியா ஒரே ஒரு வெள்ளிப் பதக்கத்துடன் 60வது இடத்தில் உள்ளது.

ஜப்பான் 17 தங்கம் உட்பட 30 பதக்கங்களுடன் 3ம் இடம் வகித்து வருகிறது. ஆஸ்திரேலியா 12 தங்கம் உட்பட 29 பதக்கங்களுடன் 4ம் இடம் வகித்து வருகிறது. ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி 11 தங்கம் உட்பட 37 பதக்கங்களுடன் 5ம் இடம் வகித்து வருகிறது

கிரேட் பிரிட்டன் 9 தங்கம் உட்பட 29பதக்கங்களுடன் 6ம் இடம் வகித்து வருகிறது. கொரியா 5 தங்கம் உட்பட 16 பதக்கங்களுடன் 7ம் இடம் வகித்து வருகிறது.

  • Share on

தொடரும் பெண்களின் ஆதிக்கம்.. இந்தியாவுக்கு மீண்டும் பெருமை!

"இது வரலாற்று சாதனை".. இந்திய ஹாக்கி கேப்டனுக்கு போன் செய்த பிரதமர் மோடி!

  • Share on