• vilasalnews@gmail.com

தொடரும் பெண்களின் ஆதிக்கம்.. இந்தியாவுக்கு மீண்டும் பெருமை!

  • Share on

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், இந்தியா மீண்டும் மீண்டும் பெண்கள் அணியால் தலை நிமிர்கிறது.

டோக்கியோ ஒலிம்பிக்கின் 9வது நாளான இன்று பதக்கங்களுக்கான பல போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், வழக்கம் போல் இந்திய அணியில் பெண்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஆண்களின் தோல்வி படலம் மீண்டும் தொடருகிறது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், இந்தியா சார்பில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் பெண்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஒலிம்பிக்கில் முதல் பதக்க கணக்கை இந்தியாவுக்கு துவக்கி வைத்தவர் மீராபாய் சானு தான். பளுதூக்கும் பிரிவில், இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கத்தை பெற்றுக் கொடுத்தார் மீராபாய். இந்த பதக்கத்துக்கு பிற வேறு மெடல்களை கைப்பற்ற முடியாமல் இந்தியா திணறி வந்தது. இந்த சூழலில் தான் நேற்று (ஜுலை.30) இந்தியா 2 மெடல்களை உறுதி செய்தது. அந்த இரண்டு மெடல்களுக்கு காரணமும் பெண்கள் தான்.


ஆம்! மகளிர் ஒற்றையர் குத்துச்சண்டை போட்டியில், இந்தியாவின் லோவ்லினா காலிறுதியில் வென்று, வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தார். அடுத்து அரையிறுதிப் போட்டியை எதிர்நோக்கி யுள்ளார். அதேபோல், பேட்மிண்டன் ஒற்றையர் பெண்கள் பிரிவில், காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பிவி சிந்து வென்று, வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தார். இன்று பிற்பகல் 2.30 மணிக்கு பிவி சிந்துவின் அரையிறுதி ஆட்டம் நடைபெற உள்ளது. அதில் வெற்றிப் பெற்றுவிட்டால் வெள்ளிப்பதக்கம் உறுதியாகிவிடும்.

தொடரும் பெண்களின் ஆதிக்கம்.. இந்தியாவுக்கு மீண்டும் பெருமை!

இன்று காலை முதல் நடந்த போட்டியில் மீண்டும் பெண்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். பெண்கள் வட்டு எறிதல் போட்டியில், இந்தியாவின் கமல்ப்ரீத் கவுர் இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். அதுவும், இரண்டு பிரிவிலும் சேர்த்து மொத்தம் 31 வீராங்கனைகள் கலந்து கொண்ட வட்டு எறிதல் போட்டியில், அதிகபட்சம் 64 மீட்டர் தூரம் வீசி இரண்டாவது இடத்தைப் பிடித்து அதகளம் புரிந்துள்ளார். அவர் இதே ஃபோர்ஸில் இருந்தால், வரும் ஆகஸ்ட் 2ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் நிச்சயம் வெள்ளிப்பதக்கம் அல்லது தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கலாம்.

தொடரும் பெண்களின் ஆதிக்கம்.. இந்தியாவுக்கு மீண்டும் பெருமை!

இன்று இந்திய பெண்கள் நிகழ்த்திய மற்றொரு வாவ் தருணங்களில் ஒன்றாக அமைந்தது மகளிர் ஹாக்கி போட்டி. ஆம்! இன்று தென்னாப்பிரிக்கா அணியுடன் கட்டாயம் வெல்ல வேண்டிய ஆட்டத்தில் இந்தியா களமிறங்கியது. மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 4-3 என்ற கோல் கணக்கில் இந்திய மகளிர் அணி வெற்றிப் பெற்றுள்ளது. எனினும், அயர்லாந்து - பிரிட்டன் அணிகள் மோதும் போட்டியின் முடிவின் படி, இந்திய அணி காலிறுதி தகுதி முடிவு செய்யப்படும். அயர்லாந்து பிரிட்டனுடன் டிரா செய்தாலோ அல்லது தோற்றாலோ இந்திய மகளிர் அணி காலிறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுவிடும்.

அதேசமயம், இன்று ஆண்கள் சார்பில் ஏமாற்றமே மிஞ்சியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமித் பங்கால், ஆண்களுக்கான flyweight round 16 குத்துச்சண்டை போட்டியில் இன்று நாக் அவுட் ஆகி வெளியேறினார். இத்தனைக்கும் இந்த flyweight பிரிவில் அமித் பங்கால் உலக தரவரிசையில் நம்பர் ஒன் வீரர் என்பது குறிப்பிடத் தக்கது. இதனால், அமித் நிச்சயம் இந்தப் போட்டியில் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏமாற்ற மே மிஞ்சியது. அதேபோல், இந்திய வில்வித்தை வீரர், காலிறுதிக்கு முந்தைய சுற்றில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் களமிறங்கிய அட்டானு தாஸ் போராடி தோல்வி அடைந்தார். கடைசி சுற்றில் வெறும் ஒரு பாயிண்ட் தவறவிட்டு, போட்டியை வெல்லும் வாய்ப்பை இழந்தார். வில்வித்தையில் ஆண்கள் பிரிவில் இந்தியாவசமிருந்த கடைசி நம்பிக்கை அவர் தான். ஆனால், இங்கும் ஏமாற்றமே மிஞ்ச, இந்தியா வுக்கு பெண்களே பதக்கங்களை தேடித் தந்து வருகின்றனர்.

  • Share on

‘ஹேப்பி பர்த் டே கேப்டன் கூல் தோனி..’ - ட்விட்டரில் தெறிக்கவிடும் தோனி ஆர்மி

ஒலிம்பிக் 2020.. தொடரும் சீனாவின் ஆதிக்கம்.. பதக்க பட்டியலில் முதலிடம்.. இந்தியாவிற்கு 60வது இடம்!

  • Share on