உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் தோல்வியை சந்தித்தது. இதை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4-ம் தேதி தொடங்க உள்ளது.
இங்கிலாந்து தொடருக்கு இன்னும் 5 வார காலம் இருக்கும் நிலையில் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் காயம் காரணமாக விளையாடமாட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
அவரது காயத்தின் தன்மையை பொறுத்து ஒரிரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடமாட்டாரா அல்லது முழு தொடரிலிருந்து விலகுவாரா என்று தெரியவரும்.