பிலவ வருடம் வைகாசி 31 ஆம் தேதி ஜூன் 14,2021 திங்கள்கிழமை. சதுர்த்தி திதி இரவு 10.34 மணிவரை அதன் பின் பஞ்சமி திதி. பூசம் இரவு 08.36 மணிவரை அதன் பின் ஆயில்யம். சந்திரன் இன்றைய தினம் கடக ராசியில் பயணம் செய்கிறார். தனுசு ராசிக்காரர்க ளுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.
மேஷம்
சாதகமான நாளாக இருக்கும். மனதில் அமைதி, மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். திட்டமிட்டு, திறமையை வெளிப்படுத்துவதன் மூலம் வேலையை விரைவாக முடிக்கலாம். குடும்பத்தில் அனுசரணையான போக்கு நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும்.
ரிஷபம்
அனுகூலமான நாளாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். திறமையை வெளிப்படுத்துவீர்கள். நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். வேலையை சுறுசுறுப்பாக முடிப்பீர்கள். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.
மிதுனம்
நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய நாளாக இருக்கும். எளிதில் உணர்ச்சி வசப்பட்டு முடிவுகள் எடுப்பது வளர்ச்சியை பாதிக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.
கடகம்
சுமாரான நாளாக இருக்கும். சூழலுக்கு ஏற்ப அனுசரித்து செல்வது நல்லது. வேலை பரபரப்பாக செல்லும். கூடுதல் வேலைச் சுமை உங்கள் தலையில் விழும். இது மன அமைதியைக் குறைக்கும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காத. பணப் பற்றாக்குறை அதிகரிக்கும்.
சிம்மம்
ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். சூழலை உணர்ந்து அதற்கு தக்கபடி செயல்படுவது நல்லது. வேலை, தொழில் சூழல் போராட்டம் மிகுந்ததாக இருக்கும். மன வருத்தம் அதிகரிக்கலாம். கணவன் மனைவி இடையே அன்பு குறையலாம். சிலருக்கு பண வரவுக்கான வாய்ப்பு உள்ளது.
கன்னி
திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் இன்றைய நாளை சாதகமானதாக மாற்றலாம். வேலையில் நாட்டம் குறையும். வேலை தொடர்பாக பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் குறையலாம். செலவுகள் அதிகரிக்கும்;.
துலாம்
இனிமையான நாளாக இருக்கும். விருப்பங்கள் நிறைவேறும். வேலையில் செயல் திறன் அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக் கம் அதிகரிக்கும். நிதி நிலை திருப்திக ரமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.
விருச்சிகம்
வளமான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இலக்குகளை நோக்கிய பயணம் வெற்றிகரமாக இருக்கும். வேலையை சுறுசுறுப்பாக முடிப்பீர்கள். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.
தனுசு
ஏற்ற இறக்கம் கொண்ட நாளாக இருக்கும். நிதானத்தை கடைபிடிப்பது இன்றைய நாள் அமைதியாக கழிய உதவியாக இருக்கும். வேலையில் கவனக்குறைவு அதிகரிக்கும். வேலையை செய்ய முடியாமல் மனம் திணறும். குடும்பத்தில் அமைதி நிலவும். செலவுகள் அதிகரிக்கும். செலவு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
மகரம்
மகிழ்ச்சியான நாளாக இருக்கும். வெளியிடத்திற்கு சென்று வர மனம் ஏங்கும். வேலை சூழல் முன்னேற்றமாக இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு இருக்கும். மன நிலையில் தடுமாற்றம் இருக்கும். குடும்பத்தி னருடன் கலகலப்பாக இருப்பீர்கள். செலவுகள் அதிகரிக்கும். பண இழப்புக்கும் வாய்ப்புள்ளது.
கும்பம்
சிறப்பான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலைப் பளு சற்று அதிகமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களுடன் நட்புறவோடு பழகுவது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும்.
மீனம்
சாதகம் மிகுந்த நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை, உற்சாகம் அதிகரிக்கும். வேலையில் சிறப்பான பங்களிப்பை வழங்குவீர்கள். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அன்பான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சியான சூழல் காணப்படும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும்.