• vilasalnews@gmail.com

இன்றைய ராசி பலன் சனிக்கிழமை - ஜூன் 12, 2021

  • Share on

பிலவ வருடம் வைகாசி 29 ஆம் தேதி ஜூன் 12,2021 சனிக்கிழமை. துவிதியைத் திதி இரவு 08.18 மணிவரை அதன் பின் திருதியைத் திதி. திருவாதிரை இரவு 09.40 மணிவரை அதன் பின் புனர்பூசம். சனிபகவான் ஆதிக்கம் நிறைந்த இன்றைய தினம் சந்திரன் மிதுன ராசியில் பயணம் செய்கிறார். விருச்சிக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

மேஷம்

சுமுகமான நாளாக இருக்கும். இலக்குகள் நிறைவேறும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். திறமையை வெளிப்படுத்துவீர்கள். குடும்பத்தில் நல்லுறவு நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது.

ரிஷபம்

சுமாரான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலை, தொழிலில் சாதகமான சூழல் இருக்காது. வேலையில் சிறு சிறு தவறுகள் நேரலாம் குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே மோதல் போக்கு ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்புள்ளது.

மிதுனம்

மனதில் அவநம்பிக்கை அதிகரிக்கும். இது தன்னம்பிக்கையையும் ஆற்றலையும் குறைக்கும். வேலையில் நாட்டம் குறையும். இதனால் வேலையை குறித்த நேரத்தில் முடிக்க முடியாத நிலை ஏற்படும். கணவன் மனைவி இடையே உறவில் சிக்கல் காணப்படும். வார்த்தை பிரயோகத்தில் கூடுதல் கவனம் தேவை. பண வரவுக்கு சிறிதளவுக்கு வாய்ப்புள்ளது. செலவும் அதிகரிக்கும்.

கடகம்

ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். நம்பிக்கையுடன் செயல்படுவதன் மூலம் இலக்கை அடையலாம். வேலைப் பளு அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வேலை தாமதத்தைத் தவிர்க்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. தேவை அதிகரிக்கும்.

சிம்மம்

சாதகமான நாளாக இருக்கும். முன்னேற்றம் காண்பீர்கள். வேலைச் சூழல் சாதகமாக இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சியான சூழல் இருக்கும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது. நிதி நிலை திருப்திகரமாக இருக்கும்.

கன்னி

வெற்றிகரமான நாளாக இருக்கும். இன்றைய நாளை உங்கள் முன்னேற்றத்திற்காக பயன்படுத்திக்கொள்வது நல்லது. வேலை, தொழிலில் சாதகமான சூழல் நிலவும். சுறுசுறுப்பாக வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும்.

துலாம்

ஆற்றல் குறைந்த நாளாக இருக்கும். வேலையில் தடைகள், தடங்கலைச் சந்திப்பீர்கள். வேலையில் தவறுகள் நேரலாம். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு இருக்காது. மனம் விட்டுப் பேசுவதன் மூலம் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணத் தேவை அதிகரிக்கும். செலவு அதிகரிக்கும்.

விருச்சிகம்

ஏற்ற இறக்கம் கலந்த நாளாக இருக்கும். பொறுப்புக்கள் அதிகரிக்கும். ஆற்றல் குறைந்து காணப்படும். வேலையில் சாதகமான சூழல் இருக்காது. குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாத நிலை ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் குறையலாம். பண வரவுக்கு சிறிதளவுக்கு வாய்ப்புள்ளது. செலவும் அதிகரிக்கும்.

தனுசு

சுமுகமான நாளாக இருக்கும். முயற்சிகள் வெற்றி பெறும். வேலை, தொழிலில் திருப்திகரமான சூழல் காணப்படும். வேலையை எளிதாக முடிப்பீர்கள். கணவன் மனைவி இடையே நட்புறவு அதிகரிக்கும். நிதி நிலை சீராக காணப்படும். சேமிப்பு அதிகரிக்கும்.

மகரம்

முன்னேற்றமான நாளாக இருக்கும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். வேலையில் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலையில் திருப்திகரமான சூழல் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும்.

கும்பம்

சோர்வான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை, புத்துணர்வு குறைந்து காணப்படும். மனதில் குழப்பம் அதிகரிக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். உயர் அதிகாரியின் கோபத்துக்கு ஆளாக நேரிடலாம். குடும்பத்தில் குழப்பமான சூழல் காணப்படும். நல்லிணக்கம் பாதிக்கப்படும். நிதி நிலை சுமாராக இருக்கும். பண இழப்புக்கு வாய்ப்புள்ளது.

மீனம்

சிறப்பான நாளாக இருக்கும். தன்னம்பிக்கை, புத்துணர்வு அதிகரிக்கும். வேலை, தொழிலில் லாபகரமான சூழல் காணப்படும். வேலையை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதியின்மை நிலவும். வாழ்க்கைத் துணையுடன் மனம்விட்டு பேசுவது பிரச்னையை போக்க உதவும். நிதி நிலையில் ஏற்றத்தாழ்வு இருக்கும்.


  • Share on

இன்றைய ராசி பலன் புதன்கிழமை ஜூன் 2, 2021

இன்றைய ராசி பலன் திங்கள்கிழமை ஜூன் 14, 2021

  • Share on