• vilasalnews@gmail.com

இன்றைய ராசி பலன் புதன்கிழமை ஜூன் 2, 2021

  • Share on

பிலவ வருடம், வைகாசி 19, புதன்கிழமை, 2.6.2021, தேய்பிறை, சப்தமி திதி காலை 6:26 வரை, அதன்பின் அஷ்டமி திதி, சதயம் நட்சத்திரம் இரவு 9:59 வரை,
அதன்பின் பூரட்டாதி நட்சத்திரம், சித்த - அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல 1.30 மணி வரை.
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
குளிகை : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : பூசம், ஆயில்யம்
பொது : தேய்பிறை அஷ்டமி, பைரவர் வழிபாடு

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களை சுற்றி இருப்பவர்கள் பற்றிய புரிந்துணர்வு ஏற்படும். குடும்பத்தில் மனைவி வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காண்பீர்கள். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எடுக்கும் முடிவுகளில் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் உதவி செய்வார்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய பலவீனம் அறிந்து செயல்படுவீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரக் கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நட்பு வட்டம் விரியும். கணவன்-மனைவி பிணக்குகள் நீங்கும். உடல் நலத்தில் எச்சரிக்கை தேவை.

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடனிருப்பவர்களே துரோகம் செய்யும் வாய்ப்புகள் உண்டு என்பதால் எச்சரிக்கை தேவை. உத்யோகத்தில் இருப்பவர்கள் எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து விட்டு முடிவெடுப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்த பிரச்சனைகள் மேலும் வலுவாக்கும் என்பதால் கூடுமானவரை விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உடல் நலத்தைப் பேணிக் காப்பது நல்லது.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கடமையில் அதிக பொறுப்பு ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர் பார்க்கும் அளவிற்கு லாபம் இல்லா விட்டாலும் பிரச்சனை இல்லை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவு குறையும். போட்டியாளர்களின் எண்ணிக்கை உயரும். உடல் நலத்தில் எச்சரிக்கை தேவை.

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்து செல்வது அமைதி ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கண்டிப்பாக கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தேவையற்ற நண்பர்களுடன் நட்புறவு கொள்வதை தவிர்க்கவும். தந்தைவழி உறவினர்கள் மூலம் அனுகூலமான பலன் பெறலாம். ஆரோக்கியம் சிறப்பாக அமையும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்த முயற்சிகளின் காலதாமதம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபார விஷயங்களில் மெத்தன போக்கு தவிர்ப்பது நல்லது. புதிய புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணவரவு சரளமாக இருக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தில் முன்னெச்சரிக் கையுடன் இருப்பது நல்லது.

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானத்துடன் கையாள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் பெருக்குவதற்கு வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்க ளுக்கு மனதில் தளர்வு ஏற்படும். இனம்புரியாத குழப்பநிலை நீடிக்கும். மனதிற்கு பிடித்தவர்கள் இடத்தில் மனம்விட்டுப் பேசுவது நல்லது. கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். உடல் நலத்தில் முன்னெச்சரிக்கை தேவை.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களை சுற்றியுள்ளவர்களை அடையாளம் கண்டு கொள்வீர்கள். உங்களைப் புரிந்து கொள்ளாதவர்கள் புரிந்து கொள்ள முயற்சி செய்வார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு இருக்கும் போட்டிகளை மனதில் கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையில்லாத அலைச்சல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி ஒற்றுமையில் கருத்துவேறுபாடு ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவி இடையே தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதால் கூடுமானவரை நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. குடும்பத்தில் பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கவனமாக இருப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்து வந்த போட்டிகள் குறையும். திறமைக்கு உரிய ஊதியம் கிடைக்கும். உடல்நலப் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் என்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வீண் விரயங்களை தவிர்ப்பதன் மூலம் பிரச்சினைகளை குறைத்துக் கொள்ளலாம். புதிய பொருள் சேர்க்கை ஒரு சிலருக்கு உண்டாகும். தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையில்லாத அலைச்சல் ஏற்படலாம். கூடுமான வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். உடல்நலத்தில் எச்சரிக்கை தேவை.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யாரையும் எதிர்க்காமல் பொறுமை காப்பது நல்லது. குடும்பத்தில் இருக்கும் மூத்த நண்பர் களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவியிடையே தேவையற்ற பிரச்சனைகள் எழலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் கவனம் கூடுதல் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த உற்சாகம் குறைய துவங்கும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துச் செயலாற்றுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யாமல் யோசித்து முடிவெடுப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் எண்ணிக்கை உயரும். பங்குதாரர்க ளுடன் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவி இடையே நல்லுறவு ஏற்படும். உடல்நல பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க உணவு கட்டுப்பாடு மேற்கொள்வது நல்லது.

  • Share on

இன்றைய ராசி பலன் செவ்வாய்கிழமை ஜூன் 1, 2021

இன்றைய ராசி பலன் சனிக்கிழமை - ஜூன் 12, 2021

  • Share on