• vilasalnews@gmail.com

இன்றைய ராசி பலன் செவ்வாய்கிழமை ஜூன் 1, 2021

  • Share on

பிலவ வருடம் வைகாசி 18ஆம் தேதி ஜூன் 1,2021 செவ்வாய்க்கிழமை. சப்தமி திதி இரவு 12.46 மணிவரை அதன் பின் அஷ்டமி திதி. அவிட்டம் மாலை 04.07 மணி வரை அதன்பின் சதயம். சந்திரன் இன்றைய தினம் கும்ப ராசியில் பயணம் செய்கிறார். கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் மனதில் நினைக்கும் காரியம் ஒன்று நிறைவேற கால தாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவு குறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்பு தேவை. கணவன்-மனைவி இடையே அன்பு மேலோங்கும். ஆரோக்கியம் கவனம் தேவை.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கும் சில விஷயங்களில் இடையூறுகள் ஏற்படலாம். திடீர் வீண் விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்க ளுக்கு பணியில் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவ விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. ஆரோக்யம் சீராக இருக்கும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களை நீங்களே புரிந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைக்கும். சுய மதிப்பீடு செய்வதில் நாட்டம் செலுத்துவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியாளர்களின் உதவி கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களைச் சுற்றியிருக்கும் எதிரிகளின் தொல்லை நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பற்றிய கவலைகள் இருக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான வர்த்தகம் சிறப்பாக அமையும். கணவன் மனைவி ஒற்றுமையில் திருஷ்டி ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தை கவனத்துடன் இருங்கள்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சந்தர்ப்பத்திற்கு ஏற்ற சூழ்நிலைகளை சமாளித்து செல்வீர்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பழைய நினைவுகள் மனதில் உளைச்சலுக்கு உள்ளாக்கும். கணவன் மனைவி பிரச்சனைகள் தீரும். ஆரோக்கியம் மேலும் முன்னேற்றம் அடையும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய சமயோசிதமான பேச்சாற்றல் மற்றவர்களை எளிதாக கவரும். உத்தியோகத்தில் இருப்பவர்க ளுக்கு புதிய நட்பு வட்டம் விரியும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முயற்சிகள் காலதாமதம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பொருளாதார நெருக்கடிகளையும் சிக்கனமாக செயல்படுவதன் மூலம் சமாளிக்கலாம். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்ப பிரச்சினைகள் தீர கூடிய வாய்ப்புகள் அமையும். அனைவரும் ஒற்றுமையாக அமர்ந்து பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான பயணங்களில் நிதானம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள் ஆக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. ஆரோக்கியம் சீராக இருக்கும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திருமண சுபகாரிய முயற்சிகள் பலிதமாகும். தொழில் மற்றும் வியாபார ரீதியான மாற்றங்கள் மூலம் முன்னேற்றம் காணலாம். உத்தியோகத் தில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகள் மூலம் அனுகூல பலன் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை மேலோங்கும். பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சகோதர சகோதரிகளின் மூலம் அனுகூலமான பலன்களைக் காணக்கூடிய யோகம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பணி சுமை மேலும் அதிகரித்து சோர்வை உண்டாக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். ஆரோக்யத்தில் கவனம் செலுத்துங்கள்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை எப்படி சமாளிப்பது என்பதில் கவனம் செலுத்துவீர்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான வருமானம் உயர கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்க ளுக்கு திடீர் அதிர்ஷ்டங்கள் கைகூடி வரும். வெளியூர் தொடர்பான விஷயங்களில் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறும். குடும்ப விஷயங்களை வெளியில் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது. சீராகும்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடன்பிறந்தவர்கள் வழியில் நல்ல நிகழ்வுகள் நடைபெறும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிணக்குகள் தீரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சில அதிரடி மாற்றங்களை செய்து வாடிக்கையாளர் களை கவர முயற்சி செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் சாதகப் பலன்கள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அனாவசிய வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பொறுமை காப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான பிரச்சினைகள் தீரும். போட்டியாளர்களின் எண்ணிக்கை குறையத் துவங்கும். மனைவிவழி உறவினர்கள் மூலம் அனுகூலமான பலன்களைக் காண்பீர்கள். ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். உடல்நலம் சீராகவே இருக்கும்.

  • Share on

இன்றைய ராசி பலன் வெள்ளிக்கிழமை மே 28, 2021

இன்றைய ராசி பலன் புதன்கிழமை ஜூன் 2, 2021

  • Share on