மேஷம் :
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சீராக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முடிவுகளை எடுப்பதற்கு நல்ல காலமாக அமையும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். மனக்கவலை தீர மகேசனை வழிபடுங்கள்.
ரிஷபம் :
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அனைவரிடமும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துக் கொள்வது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதால் எச்சரிக்கை தேவை. கணவன் மனைவி ஒற்றுமையில் சிறு சிறு பாதிப்புகள் வந்து நீங்கும். சங்கடங்கள் தீர விநாயகரை வழிபடுதல் சிறப்பு.
மிதுனம் :
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்றார் உறவினர்களின் மூலம் சில சங்கடமான செய்திகள் வரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் பங்குதாரர்களிடம் இணக்கமான செல்வீர்கள். கணவன் மனைவி இடையே இருந்த பனிப்போர் நீடிக்க வாய்ப்புகள் உண்டு. கடன் தொல்லைகள் அகல பைரவ வழிபாடு செய்யுங்கள்.
கடகம் :
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத திடீர் செய்திகள் மனதிற்கு உற்சாகத்தை அளிக்கும் வகையில் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட கால பிரச்சனைகளுக்கான முடிவுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பொருளாதார ரீதியான பிரச்சனைகளை திறம்பட சமாளிப்பீர்கள். கணவன் மனைவி இடையே ஆலோசனைகள் கேட்டு முடிவெடுப்பது நல்லது. நிம்மதி கிடைக்க கந்தனை வழிபடுதல் சிறப்பு.
சிம்மம் :
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தகவல் பரிமாற்றம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதில் ஏற்பட வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளிடம் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வதற்கு சந்தர்ப்பங்கள் அமையும். கணவன் மனைவி உறவில் கனிவுடன் நடந்து கொள்வது நல்லது. பிரச்சினை தீர விஷ்ணு பகவானை வழிபடுங்கள்.
கன்னி :
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பண ரீதியான விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உடனிருப்பவர்களே உங்களுக்கு துரோகம் செய்யும் வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபார ரீதியான வெளியிட பயணங்களின் போது எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குடும்பத்துடன் நேரத்தை செலவிட கூடிய வாய்ப்புகள் அமையும். கணவன்-மனைவி இடையே அன்பு மேலோங்கும். பிரச்சனை தீர பிள்ளையாரை வணங்குங்கள்.
துலாம் :
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு உங்களுடைய குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் நீண்ட கால அடிப்படையில் எடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிந்தனைகள் மேலோங்கி காணப்படலாம். கணவன் மனைவி கருத்து வேற்றுமை ஏற்படலாம். உற்சாகம் பிறந்தது உமையவளை வழிபடுங்கள்.
விருச்சிகம் :
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இதுவரை நிலுவையில் இருந்து வந்த பிரச்சனைகள் கூட படிப்படியாக மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் நன்மதிப்பு பெறுவதற்கு புதிய முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. கணவன் மற்றும் மனைவி இடையே கருத்து வேற்றுமை ஏற்படும். கூடுமானவரை தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். பிரச்சனைகள் தீர பெருமாளை வழிபடுங்கள்.
தனுசு :
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சகிப்புத் தன்மை அதிகம் தேவைப்படக் கூடிய நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவு வெறுப்பை உண்டாக்கும் வகையில் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய திறமைக்கு பாராட்டுக்கள் கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை மேலும் பலப்பட வாய்ப்புகள் உண்டு. கவலைகள் நீங்க நவகிரக வழிபாடு செய்யுங்கள்.
மகரம் :
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கூடுமானவரை எதிர்மறை ஆற்றல்களை வெளியிடும் நபர்களிடம் இருந்து சற்று தள்ளி இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஆடம்பரத்தை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றத்தில் பிரச்சனைகள் நீடிக்கும். முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் சிந்தித்து செயல்படுவது நல்லது. கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். மஹா லட்சுமியை வழிபட பிரச்சினைகள் தீரும்.
கும்பம் :
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த சில விஷயங்கள் தடையின்றி நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிக தொகைக்கு ஈடுபடுவதில் கவனத்துடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்கள் சாதகமான பேச்சினால் மற்றவர்களை எளிதாக கவர்வீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவி இடையே அன்னியோன்யம் கூடும். துன்பங்கள் தொலைய ஆனை முகனை வழிபடுங்கள்.
மீனம் :
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் உறுதியான சிந்தனை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் பதற்றமான சூழ்நிலையை தவிர்த்து விடுங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். ஒருவரை ஒருவர் அனுசரித்து விட்டுக்கொடுத்து செல்வது நலம் தரும். நினைத்தது நடக்க நீலகண்டனை வழிபடுங்கள்.