• vilasalnews@gmail.com

இன்றைய ராசி பலன் – 25-05-2021

  • Share on

பிலவ வருடம் வைகாசி 11 ஆம் தேதி மே 25,2021 செவ்வாய்கிழமை. சதுர்த்தசி திதி இரவு 08.30 மணிவரை அதன் பின் பவுர்ணமி. சுவாதி காலை 07.05 மணிவரை அதன் பின் விசாகம் மறுநாள் விடிகாலை 04.11 மணிவரை அதன் பின் அனுசம். சந்திரன் இன்றைய தினம் துலாம் ராசியில் பயணம் செய்கிறார். மீனம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.

மேஷம் : மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அமைதியான மனநிலை நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு குடும்பத்துடன் செலவிடக் கூடிய வாய்ப்புகள் அமையும். உத்தியோ கத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரித்து காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

ரிஷபம் : ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்தது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் அமையக்கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்தநிலை இருக்கும். புதிய யுக்திகளை கையாள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

மிதுனம் : மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யக்கூடாது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிக நிதானம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை நீடித்தாலும் பிரச்சனைகள் இருக்காது. கணவன் மனைவி இடையே வாக்குவாதங்கள் நீடிக்கும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது.

கடகம் : கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதிற்குப் பிடித்த சில விஷயங்கள் நடை பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இனிய தகவல்கள் வந்து சேரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகளின் நடவடிக்கையால் மனம் மகிழ்வீர்கள். பிள்ளைகள் மூலம் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை.

சிம்மம் : சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குழப்பங்கள் நீங்கி தெளிவான சிந்தனை பிறக்கும் அற்புதமான நாளாக இருக்கும். கணவன் மனைவி உறவில் இருக்கும் அன்யோன்யம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கற்பனைத் திறன் மேலும் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் நலிவடையும். ஆரோக்கியத்தின் எச்சரிக்கை தேவை.

கன்னி : கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்த காரியங்கள் நிறைவேறக் கூடிய வாய்ப்புகள் அமையும். கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டால் முன்னேற்றம் காணலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த குழப்ப நிலை மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தன்னம்பிக்கை குறையக் கூடிய வாய்ப்புகள் உண்டு.

துலாம் : துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சில மனக்கசப்புகள் ஏற்படும் என்பதால் எச்சரிக்கை தேவை. கணவன் மனைவி இடையே தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். குடும்பத்தில் இருக்கும் மூத்தவர்க ளுக்கு மரியாதை கொடுத்து நடந்து கொள்வது நல்லது. வெளியிட பயணங்களின் போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

விருச்சிகம் : விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணி சுமை குறையும். உடல் உபாதைகள் படிப்படியாக நீங்க வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் இருக்கும் இளைய சகோதரர்கள் வழியே அனுகூல பலன் உண்டு. உத்தியோக த்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். சுய தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில்லை இடையூறுகள் ஏற்படலாம்.

தனுசு : தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவலைகள் நீங்கி உற்சாகம் பிறக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் குதூகலம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்டநாள் நண்பர்களுடன் உரையாட கூடிய வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ஆரோக்கியம் சீரடைந்து வரும்.

மகரம் : மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்த விஷயங்களில் எதிர்பார்க்கும் தனலாபம் கிடைக்கும். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் விரயங்கள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீர கூடிய வாய்ப்புகள் உண்டு. புதிய கூட்டாளிகள் வந்து இணையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.

கும்பம் : கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் சண்டை சச்சரவுகள் தீரக் கூடிய வாய்ப்புகள் உண்டு. குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதைத் தடுக்கும். உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மீனம் : மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் இருந்தார் எதிரிகளின் தொல்லை நீங்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சீராக இருக்கும். தாய்வழி உறவினர் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கப் பெறும். மூலம் சில மன சங்கடங்கள் ஏற்படலாம். ஒருவரை ஒருவர் அனுசரித்து விட்டு கொடுத்து செல்வது நல்லது. உணவு கட்டுப்பாட்டில் அக்கறையுடன் இருப்பது நல்லது.

  • Share on

சித்திரை விஷூ பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு - தினசரி 10ஆயிரம் பேருக்கு அனுமதி

இன்றைய ராசி பலன் – 26-05-2021

  • Share on