• vilasalnews@gmail.com

2025 ஆம் ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைவதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகளில் இதுவும் ஒன்று!

  • Share on

ஒவ்வொரு நாளும் பிறக்கும் பொழுது புதிதாகவே பிறக்கிறது. அந்த நாள் சிறப்பாக அமைய வேண்டும் என்று தான் அந்த நாளின் தொடக்கத்தில் நாம் இறைவனிடம் வழிபாடு செய்கிறோம். 


அதைப்போல தான் ஒவ்வொரு மாத பிறப்பிலும் மாதத்தின் முதல் நாள் வழிபாடு செய்வோம். மேலும் இதே முறையில் தான் வருடப்பிறப்பு சமயத்திலும் நாம் வழிபாடு செய்வோம். வருடத்தின் முதல் நாள் அன்று நம்மால் இயன்ற வழிபாட்டு முறைகளை நாம் செய்வதன் மூலம் அந்த வருடம் சிறப்பான வருடமாக அமையும் என்ற ஒரு நம்பிக்கை நிலவுகிறது.


2025ம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி நாம் செய்ய வேண்டிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையை பற்றி தான் இப்பொழுது பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி புதன்கிழமை அன்று எந்த நேரத்தில் நாம் எழுந்து நம்முடைய வாசல் கதவை திறக்கிறோமோ, அப்பொழுது " நற்பவி நற்பவி நற்பவி" என்று மூன்று முறை கூறிக் கொண்டே திறக்க வேண்டும். இப்படி திறப்பதன் மூலம் நம் வீட்டிற்குள் நேர்மறை ஆற்றல்கள் வரும் என்று கூறப்படுகிறது. அதை போல், அன்றைய நாளில் நம்முடைய வீட்டில் நாம் எப்படி தீபமேற்றி வழிபாடு செய்கிறோமோ அதைப்போலவே அருகில் இருக்கக்கூடிய விநாயகர் ஆலயத்திற்கும் செல்ல வேண்டும்.


அங்கு விநாயகப் பெருமானுக்கு ஒரு தேங்காயை உடைத்து விநாயகர் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். இந்த தேங்காய் சூரைத் தேங்காயாக உடைத்தாலும் சரி அல்லது அர்ச்சகரிடம் கொடுத்து அர்ச்சனை செய்வது போல் உடைத்தாலும் சரி. ஆனால் விநாயகப் பெருமானுக்கு தேங்காய் உடைக்க வேண்டும். மேலும் அன்றைய தினத்தில் பசு மாட்டிற்கு தங்களால் இயன்ற உணவுப் பொருட்களை தானமாக தந்து பசுமாட்டையும் வழிபாடு செய்ய வேண்டும்.


இப்படி நாம் ஜனவரி 1ஆம் தேதி விநாயகப் பெருமானுக்கு தேங்காய் உடைத்து வழிபாடு செய்தோம் என்றால் நம்முடைய கர்ம வினைகள் அனைத்தையும் விநாயகப் பெருமான் தீர்ப்பார். அதன் மூலம் அந்த வருடமே நமக்கு சிறப்பான வருடமாக அமையும் என்று கூறப்படுகிறது. மேலும் பசு மாட்டிற்கு உணவு அளிப்பதன் மூலம் அனைத்து தெய்வங்களின், தேவர்களின் அருளையும் அந்த வருடம் முழுவதும் பெற முடியும்.

  • Share on

திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபம் 2024 : மலையேற இவ்வளவு பேருக்கு மட்டுமே அனுமதி!

  • Share on