தெய்வங்களை வலம் வந்து வழிபாடு செய்வது சிறப்பு வாய்ந்தது. அந்த வகையில் எந்த தெய்வத்தை எத்தனை முறை வலம் வந்து வழிபாடு செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு தெய்வத்தையும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வலம் வந்து வழிபாடு செய்ய வேண்டும். பிரகார வலம் எப்போதும் இடமிருந்து வலமாக வரவேண்டும். ஒவ்வொரு கடவளுக்கும் இத்தனை முறைத்தான் வலம் வரவேண்டும் என்பது ஐதீகம்.
அதன்படி, கோவிலுக்குள் எந்த தெய்வத்தை எத்தனை முறை வலம் வரவேண்டும் என்று நம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இன்றோ பெயரளவில் ஒரு முறை அல்லது 3 முறை வலம் வருதல் என்று வழக்கமாகிவிட்டது.
கோவிலில் பிரகாரத்தை சுற்றி வருவதால் முற்பிறவியில் செய்த பாவம் நீங்கும். அப்படி வலம் வரும் போது, நிறைமாத கர்ப்பிணி நடப்பது போல மெதுவாகவும், தெய்வ சிந்தனையுடனும் வலம் வர வேண்டும்.
மேலும், ஓடுவது, வேகமாக நடப்பது, சப்தம் எழுப்புவது, தேவையற்றதை பேசிக்கொண்டே வருவது ஆகியவை பாவத்தை அதிகமாக்கும்.
விநாயகர் - 1 அல்லது 3 முறை
சூரியன் - 2 முறை
சிவபெருமான் - 3, 5, 7 முறை
முருகன் - 3 முறை
தட்சிணாமூர்த்தி - 3 முறை
சோமாஸ் கந்தர் - 3 முறை
அம்பாள் - 4, 6, 8 முறை
விஷ்ணு - 4 முறை
மகாலட்சுமி - 4 முறை
அரச மரம் - 7 முறை
அனுமன் - 11 அல்லது 16 முறை
நவக்கிரகம் - 9 முறை
ஏதாவது மனதில் நினைத்து அது நிறைவேற வேண்டும் என்று கோவிலை வலம் வருபவர்கள், 108 முறை வலம் வருவது நல்லது.
அதேபோல, ஆண்கள் அஷ்டாங்கப் பணிவு (சாஷ்டாங்கமாக) என்ற முறையிலும், பெண்கள் பஞ்சாங்கப்பணிவு (குணிந்து) என்ற முறையிலும் விழுந்து வணங்க வேண்டும்.