• vilasalnews@gmail.com

திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபம் 2024 : மலையேற இவ்வளவு பேருக்கு மட்டுமே அனுமதி!

  • Share on

இந்துக்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றானது கார்த்திகை தீபம். இந்த தீபத் திருவிழாவில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் விளக்கேற்றி வைத்து வழிபடுவர். மேலும் பிரசித்தி பெற்ற கோவில்களிலும் கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.


அந்த வகையில், தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் ஒன்றான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வருகின்ற டிசம்பர் 1ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்பட இருக்கிறது.


திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவானது டிசம்பர் 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ள நிலையில் டிசம்பர் 13ஆம் தேதி பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.


மேலும், ஆண்டுதோறும் திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்த நிலையில், கூட்ட நெரிசலை தவிர்க்க அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மட்டுமே பக்தர்கள் மலையேறவும் கோவிலுக்கு உள்ளும் அனுமதிக்கப்பட்டு வரப்படுகிறது.


அந்த வகையில் திருவண்ணாமலை பரணி தீபத்தின் போது கோவிலுக்கு உள்ளே 7050 பக்தர்களும் மகா தீபத்தின் போது 11,500 பக்தர்களும் அனுமதிக்கப்பட உள்ளனர்.


மேலும் மலை ஏறுவதற்கு 2,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் மலையேறும் பாதையில் மருத்துவ குழுவினரின் பரிசோதனைக்குப் பிறகு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 85 மருத்துவ குழுவினர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தேவைப்படும் பட்சத்தில் கூடுதல் மருத்துவ குழுவினர் வரவழைக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகா தீபத் திருவிழாவின் போது ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உள்ளதும் குறிப்பிடத்தக்கது.


இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு 35 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Share on

அறுபடை வீடுகளில் திருத்தணி முருகன் கோயிலில் மட்டும் சூரசம்ஹாரம் நடைபெறாது என்பது தெரியுமா உங்களுக்கு?

  • Share on