அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான நன்கொடை வசூல் 100 கோடி ரூபாயைத் தொட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராமர் கோயில் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து, கோயில் கட்டுவதற்கு பொதுமக்களிடமிருந்து நன்கொடையாக பணம் வசூலிக்கப்படும் என கோயில் நிர்வாகம் கூறியிருந்தது.
இந்நிலையில், நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்காக நன்கொடை கொடுத்து வருகின்றனர்.
இந்த நன்கொடை தற்போது 100 கோடி ரூபாயை எட்டியுள்ளதாக ராம் பவன் அமைப்பின் தலைவர் சக்திசிங் தெரிவித்துள்ளார்.